Tag Archives: சாக்கடை

எல்லோரும் தற்கொலை செய்துகொள்ளுங்கள்..

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்) ————————————————————————————— (1) தற்கொலை செய்துகொள்ளுங்கள். கொலை என்பது கொல்வது எனில், சாக நினைக்கும் அத்தனைப் பேரும் முதலில் தன்னைத் தானே கொன்றுகொள்ளுங்கள். தானெனும் செருக்கு, தனது எனும் ஆசை, தன்னாலெனும் வருத்தம், தனக்கென்னும் சுயநலம், தனக்கான ஏக்கம் தனக்கான வலி, தன்னாலான தோல்வியெ என்று நினைப்பதன் பாரம் … Continue reading →

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இரத்தச் சுவடுகள்..

தலையில் அச்சு பதிய புத்தகப் பை மாட்டி நடந்த நாட்களில் புத்தகங்கள் கனத்ததுப் போலவே கனக்கிறது மனசு; கிழிந்து கிழிந்துப் போன புத்தகங்களை எடுத்தடுக்குவதைப் போலவே மனதிற்குள் கிழியும் உணர்வுகளின் அடுக்குகளோடு நடக்கிறேன்; காயமுறுகிறேன்; ஆங்காங்கே – எதை எதையோ நினைத்து வலிக்கிறது மனசு.. உள்ளே வேகமாய் புகுந்தோடி வகுப்பில் அமர்ந்த அதே பதட்டம், பயந்து … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

திசைமாற்றிய திருப்பங்கள்.. (இணைய கவியரங்கக் கவிதை)

எனையாளும் ஐயனுக்கு மடிதாங்கும் அன்னைக்கு ஒளியாகி வளியாகி உயிராகி உலகின் காட்சிகளாய் விரியும் பரமனுக்கே முதல்வணக்கம்! மொழியாகி பேச்சின் அழகாகி முதலாகி எழுத்தின் மூலமாகி விழுதாகி எங்கும் செறிவாகி தெளிவான எந்தன் அறிவே; தமிழே வணக்கம்! நெருப்பின்றி நீளும் ஒளியாகி மின்தெருவெங்கும் தமிழின் சுவையாகி இலக்கிய வணப்பிற்கு பலம்சேர்க்கும் இடமாகி எம் கருத்துக்கும் செவிசாய்க்கும் அவையே; … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.., கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-12-ஆசை)

ஆசை ஒரு நெருப்பு மாதிரி. வாழ்வில் வெளிச்சத்தை மூட்டும் தீ ஆசை. கனவுகளை விற்று காசாக்கித்தரும் வித்தை ஆசைக்கே கைவரப்பட்டிருக்கிறது. முச்சந்தியில் நிற்பவரை மாடிவீட்டிற்கு அனுப்பவும் மாடிவீட்டில் இருப்பவரை வானத்தில் பறக்கவிடவும் ஆசையால் முடிகிறது. ஆசைப்பட்டவன் மட்டுமே எண்ணியதை முடிக்கிறான். உலகின் அச்சாணி பிடுங்கி தான் விரும்பியவாரு உலகத்தை அசைத்துப் பார்க்கிறான். மூடிய கண்களுக்குள் மூவுலகின் … Continue reading →

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு

உடம்பு சுடும் சூரியனை விழுங்கி மிதிக்கும் வரப்பெல்லாம் வியர்வையால நனைச்ச மண்ணு உழவர் உயிரைப்பறிக்கும் பச்சமண்ணு; புலரும் காலைப் பொழுதை எமக்கு ஒப்பாரியா கொடுத்த மண்ணு படி அரிசி நெல்லு தேடி தெருவெல்லாம் எமை விதைச்ச மண்ணு; பாவிமக பொறந்த நேரம் பச்சவயல் காயுந் தூரம் வாழ்க்கையது விடியலை சாமி, ஒரு மரணம் கேட்டும் கிடைக்கலை … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்