Tag Archives: செம்மொழி

உடைந்த கடவுள் – 15

செய்கூலி இல்லை சேதாரம் இல்லை பத்து சவரன் வாங்கினால் ஒரு கிராம் இலவசம்; எல்லாம் விளம்பரத்தில் மட்டுமே பார்க்க முடிந்தது – தெருவில் பிளாஸ்டிக் வளையல் விற்ற ஏழை பெண்ணிற்கு!! ————————————————————

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடைந்த கடவுள் – 14

மூச்சுமுட்ட சோறு தின்று விடும் ஏப்பத்திற்கு தெரிவதில்லை பத்து நாள் பட்டினியின் கொடுமை; பத்து பைசா தட்டில் போட்டுவிட்டால் போதும் ஏப்பத்தின் சப்தம் – எல்லோருக்கும்கேட்கலாம்!! ————————————————————-

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடைந்த கடவுள் – 12

ஒரு ‘கிலோ’ கத்தரிக்காய் இரண்டு ரூபாய்; இரண்டு ‘கிலோ’ உப்பு ஒரு ரூபாய்; ஒரு ‘கிலோ’ பருப்பு பத்து ரூபாய்; பத்து ‘கிலோ’ அரிசி நானூறு ரூபாய் – என்று கணக்கெழுதும் அண்ணாச்சிக்கும் வாங்குவோருக்கும் – ‘கிலோ’ தமிழ் என்றே தெரியப் பட்டுள்ளது! ————————————————————-

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

11 உடைந்த கடவுள்..

உலகம் சுற்றி நடக்கும் கொடுமைகளால் ஒன்றிரண்டாய் தென்படுகிறது மனிதத்தின் தலை தென்படாத மனிதத்திற்கிடையே உடைகிறது கடவுள்! இருநூறு ஆண்டுகளுக்கு மேல் அடிமை பட்டு கிடந்த மண்ணில் புதைந்த உயிர்களின் மறந்த வலியால் – ஈழத்தில் நடந்த கொலைகளில் – உடைந்தது கடவுள்! தெருவெல்லாம் பிச்சையெடுத்து வழி நெடுகும் இரைந்த வறுமைக்கு வழி தேடாத அரசின் மெத்தனத்தில் … Continue reading

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

10 உடைந்த கடவுள்!!

சந்து பொந்துகளிலெல்லாம் வீழ்கிறது மனிதம்; எந்த புள்ளியில் பிறர் மன்னிக்கப் படுகின்றனரோ அந்த புள்ளியிலிருந்தே மனிதம் வீழாதிருக்கலாம்; வீழ்ந்தும் போகலாம்! ————————————–

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக