Tag Archives: தமிழ்

47, என் கவிதை பிறந்ததன் காரணம் கேளுங்கள்..

இதயம் இடிந்துவிழுந்த இடத்தில் பிறக்கிறது கவிதை, ரணமாய் வலிக்க வலிக்க அழுதகணம் வடிக்கக் கேட்கிறதென் கவிதை; காதல் சொல்லிதரப்படாத பிஞ்சுமனம் வெம்பியழுத தருணத்தில் கட்டவிழ்கிறது கவிதை, காதல் தவறென்று மட்டும் சித்தரித்த கவலையில் கதறி கதறி கிறுக்கும் கோடுகளில் எழுதக்  கேட்கிறதென் கவிதை; இடைவெளிவிட்டு வளர்த்தப் பண்பின் தெளிவுறா மனோபலத்தில் குற்றவாளியைத் தேடி அலைகிறது கவிதை, … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

51, வலிக்க வலிக்க வருகிறது மே’ பதினெட்டு..

அத்தனை படபடப்பு அன்று இதயம் முழுதும் இழுத்துக் கொண்டு ஓடும் ரயில்வண்டியென பற்றி எரிந்துக்கொண்டு ஓடிய அந்த உணர்வுகளை எங்கே தொலைத்தோம்? அழுது புரண்டு உயிர்முட்டி வீழ்ந்த தருணங்களில் ஒவ்வொரு முகத்தையாய் எடுத்து எடுத்து பார்த்து அழுதோமே – எங்கே அந்த அழையின் விம்மல் அடங்கிப் போச்சோ? உயிர் அறுந்து கிடந்த பிணமெரித்த வாடை உணர்வைப் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

1, தூக்கம் நிறைந்த கனவுகள்.. (சிறுகதை)

“சார் வணக்கம் சார்..” “ம்ம்.. ம்ம்..” “எப்படி இருக்கீங்க சார் சௌக்கியம் தானுங்களே?” “எந்தா வேணும் பர” “சும்மா உங்களைப் பார்க்கலாம்னு வந்தேன் சார்…” “அப்படியா.., நீ பரஞ்சோ மோளே..” காதில் தொலைபேசியை அடைத்துக் கொண்டு, அவன் தன் மகளுடன் பேசத் துவங்கினான். அந்த வயது முதிர்ந்த தமிழர் எதிரே அப்பாவியாய் நின்றிருந்தார். இவன் அவரை … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

44, தமிழின பேறுபோற்ற; நடைபோடுவோம்..

ஆழிப்பேரலை அழித்ததன் முடிவிலும் அடங்கா பெருநெருப்பென அகிலம் பரப்பி வெளிச்சமாய் அகன்று வளர்ந்தது தமிழினம்; அடிமைத் தனமகலும் போருக்கு உயிரையும் உதிரத்தையும் – ஆண்டாண்டுகாலமாய் சிந்தியும் சற்றும் ஓயாது வளர்வது தமிழினம்; கேட்டவர், பெற்றவர், பிடுங்கிக் கொண்டவரின் நியாயத்திற்கெல்லாம் தலைசாய்த்தும் – தன் நடை தளராமல் உலகத் தெருவெங்கும் கனகம்பீரமாய் வீறுநடைப் போடுவது தமிழினம்; வீரம் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

50, அகதிகளாய் இருக்கும் வரை; அனாதைகள் நாங்கள்

உங்களுக்கொன்று தெரியுமா நாங்களெல்லாம் அனாதைகள்; அம்மா இருந்தும் அப்பா இருந்தும் மண்ணிழந்த அனாதைகள்.. மண்ணெண்றால் உயிரென்று புரிய ஊர்விட்ட அனாதைகள்; ஆடிப்பாடி ஓடி விளையாண்ட இடம் காடாய் கனக்க விட்டுவந்த அனாதைகள்; தவறிழைத்தோம். அங்கேயே படுத்து அங்கு வெடித்த குண்டுகளோடு வெடித்து சிதறியிருக்கலாம்; வெடிகளைதாண்டி உடையும் வலி தீரா அனாதைகள் நாங்கள்; எங்கள் மண்; எங்கள் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக