Tag Archives: துளிப்பா

ஞானமடா நீயெனக்கு – 62

உன் நெடுந்தூர பயணத்தில் உனை போல் ஒரு பூ – உன் வீட்டிலும் பூக்கும்; அன்று – அதற்கு நீ தரும் நிறைய முத்தங்களில் ஒன்றிலாவது நிறைந்திருக்கும் – நானுனக்கு கொடுக்கும் நிறைய முத்தங்களின் அன்பு!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

61 குழந்தைகள் காணும் உலகம் புதிது; கவனம் கொள்க!!

அடுப்பு எரிகிறது.. நான் வெளியே கூவிச் சென்ற கீரைகாரரிடம் கீரை வாங்க வாசல் நோக்கி போகிறேன் நீ அடுப்பினை பார்க்கிறாய்.. அடுப்பில் நெருப்பு சிவப்பாக கனன்று எரிகிறது உனக்கு நெருப்பு அதிபுதிது முதன் முதலாக இன்றுதான் அடுப்பின் சிவந்த – நெருப்புத் துண்டுகளை பார்க்கிறாய், நெருப்பு சிவக்க சிவக்க – நெருப்பின் மேல் உனக்கு ஆசை … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

அருமை கவிஞர் தி. தமிழினியனின் கவிதைகள்..

ஆசை ஆதி மனிதர்களாய் இருக்க ஆசை; ஆடையற்றவர்களாய் அல்ல ஜாதியற்றவர்களாய்! —————————————— காதல் அருகில் நீயிருந்தால் அகிலத்தையே மறக்கிறேன்; அகன்று நீ சென்றால் அக்கணமே உயிர்துடிக்கிறேன்! —————————————— காதலிக்காக.. மீரா – கண்ணனுக்காக காத்திருந்தாள் கையில் வீணையோடு; உனக்காகவே காத்திருக்கிறேன் இதயம் முழுதும் நான், காதலோடு! —————————————— கல்லறை பூக்கள் பெண்கள் பூக்கள் தான் மண்மீது … Continue reading

Posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் | Tagged , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

அரைகுடத்தின் நீரலைகள் – 25

ஒரு மனிதன் பிறக்கையில் பிறக்கிறது மரணமும் மனிதனோடு வளர்கிறது மரணமும் மரணத்தை கொன்று கொன்று வென்று விட்டதாய் எண்ணும் நாளில் மரணம் மனிதனை நெருங்குவதை மனிதன் அறிவதுமில்லை, மனிதன் அடங்குவதுமில்லை! ————————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அரைகுடத்தின் நீரலைகள் – 24

மனிதம் வளர்கத் தானே கடவுள் கல்லாகவோ அல்லது கல்லில் கடவுளோ அல்லது கல்லின்றியோ கூட கடவுள் கற்பிக்கப் பட்டது? மனிதன் தான் பாவம் மனிதனை கொன்றாவது கடவுளை காப்பதாக எண்ணி கொவில்களைமட்டுமே காக்கிறான், அவனின் காப்பகத்தில் சேமிக்கப் படுகின்றன கொவிலால் கொள்ளப் பட்ட உயிர்கள். கடவுள், உடைந்த கோவிலின் வெளியே நின்று மனிதனை தேடி அலைவார் … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக