Tag Archives: நல்லறம்

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-6)

6) புகழ் என்பதொரு உச்சாணிக் கொம்பின் தேன் மாதிரி. எட்டியெடுக்க தேனடை விட்டு உதிரும் ஈக்கள் வந்து மனிதரைச் சுற்றிக் கொள்வதைப் போலவே; புகழ் கொண்டோரைச் சுற்றி தலைகொத்தும் மனிதர்கள் ஏராளமாய் திரிகின்றனர். தான் வென்றதைக்காட்டிலும் பிறர் தோற்ற வலி ஆழமான வடுவைக் கொண்டதென புரியாதோர் தலைகொத்தும் ஈக்களை தானே தேடிக்கொள்கின்றனர். தேடித் தேடிக் கொணர்ந்து … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-5)

4) கோபம் ஒருவகை விஷம். கோபத்தின் ஒவ்வொரு துளியும் விஷம். உயிர்கொல்லும் நஞ்சு. ஒரு பரம்பரையின் காடழிக்கும் கத்தியைப் போலது. அது ஒரு தீயும். மனதெரிக்கும் தீ. எடுத்து வீசினால் வார்த்தைகளையும் சேர்த்து வாரிக்கொண்டு ஒரு குடும்பத்தையே கொளுத்திவிடும் தீ. ஆனால் தீ ஒரு ஆயுதம். தீயினால் வீடு வெளிச்சம் பெரும். விளக்கினுள் ஜோதியாகும் தீ. … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-3)

1) கணினியின் வருகையால் மிச்சப்படுத்தப்பட்ட மரங்களின் வளத்தை குளிரூட்டி எந்திரங்கள் குலைத்துவிட்டதைப்போல; மனிதன் தனது தேவைகளை நிறைவுசெய்துக் கொள்வதற்கென செய்த கத்தியும் இன்று மனிதனைக் கொல்லவே தேடியலைகிறது. கத்திகளுக்கு வேண்டுமாயின்’ பெயர் வேறு முகம் வேறாயிருக்கலாம்’ ஆனால் மனிதர்களே ஜாக்கிரதை! 2) ஒவ்வொரு இடர் வருகையிலும் வாழ்வின் சிறகு ஒன்று நமக்குத் தெரிந்தே உதிர்கிறது, ஆனால் … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

“மேதின சாபமும்; தீக்குச்சி ஏற்றும் தீபங்களும்”

ஒவ்வொரு எரியும் தீக்குச்சியாய் விளக்கேற்றி விட்டு அணைந்துவிடுகின்றனர் உழைப்பாளிகள்; எடுக்கும் பணத்தின் நன்றிகளையும் வட்டிக்கு விட்டுவிட்டு உழைப்பவர்களின் ரத்தத்தில் நீந்தி தலைமுறைகளைக் கடந்துவிடுகிறார்கள் முதலாளித்துவ அட்டைகள்; மூக்கடையும் சாக்கடையில் உயிர்மிதக்கும் கனவுகளுக்கு பொறுப்பில்லா கயமைதனத்தை எண்ணவும் மறுக்கிறது சமுதாயம்; குடித்துமிழும் சாராயத்தின் எச்சில் நோண்டி நாற்றமென்று முகம்பொத்திக் கொள்கிறது மனிதம் தொலைக்கும் மக்கள் கூட்டம்; வியர்வையில் … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வயதானாலென்ன மருந்திருக்குச் சாப்பிடலாம்..

1 மருத்துவர் சொல்கிறார் உப்பு சேர்க்கக்கூடாதாம் சர்க்கரையை விஷம்போலெண்ணி ஒதுக்கிவிடவேண்டுமாம் காரம் கூடவேக் கூடாதாம் – வேறென்ன சமைப்பாள் எனக்காக என் மனைவி ? ஒரு சொட்டுக் கண்ணீரை விடுவாள்… கண்ணீரின் ஈரத்தில் கடக்கிறதென் காலம்.. ——————————————————————- 2 பொதுவாக எல்லோரும் வாழ்த்தும்போது நூறாயுசு என்று வாழ்த்துவார்கள் இந்த மனித ஜென்மங்களோடு நூறு வருடம் வேறு … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்