Tag Archives: பணக்காரன்

போதைச் சேற்றில் மனித நாற்றுகள்..

தெரு தெருக்குச் சாராயம் வழிநெடுக்கப் போராடும் வறுமைக்குக் குழிதோண்டும் வாழ்க்கைக்கு பாதாளம்! இளமைக்கு இடராகும் இயற்கைக்கு எதிராகும் இன்பத்தின் எல்லையிலும் போதை; துன்பத்தின் துளிராகும்! கல்விக்கும் கால் சறுக்கும் கடலில் உப்பாய்ச் செல்வங் கரையும் சந்ததிக்கும் குடிகாரப் பழிசூட்டும்; சாகும்போது(ங்)கூட ச்சீ இவனான்னு பிறர்வாயில் பிறப்பு நாறும்! ஒருநாள்னு குடிப்பவனும் ஓலைக் குடிசையில் அடிப்பவனும் மாடிவீட்டில் … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரை – 11 – பொறாமை)

மனிதனின் கேடிலும் கெட்ட கேடு பொறாமைதான். மனிதன் பிறக்கையிலேயே தன்னை அழிப்பதற்காக தானே தன்னோடு கொண்டுவந்த மிகப்பெரிய விஷமெனில் அது பொறாமையுணர்வாகத் தானிருக்கும். வெற்றி புரிபடாத நிலையிலும், வெல்வதன் அவசியத்தை உணராமலும், தனது இயலாமையை சரிசெய்துக் கொள்ளமுடியாமல் தன்னைத்தானே கொன்றுவிட தனையறியாமலே தீர்மாணித்து தன்மீதே நெருப்பள்ளி போட்டுக்கொள்ளும் செயலே பிறர்மேல் பொறாமை கொள்ளும் செயலும். ஆனால் … Continue reading →

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-10-உதவி)

உதவி என்பது கடவுள் தன்மையைக் கொண்டது. உதவுபவர் கடவுளுக்கு இணையாக மதிக்கப்படுகிறார். கடவுள் என்பவர் ஆபத்தில் உதவவே அழைக்கப்பட்டவராக இருக்கலாம். அல்லது உதவியதன் நன்றியாகவே அவரை கையெடுத்து வணங்கப் பழகியிருக்கலாம். உயிருற்று இருக்க ‘உதவும்’ நிலம் நீர் காற்று வானத்திற்கே கடவுளுக்கு நிகரான இறைவணக்கங்கள் செய்யப் பழக்கப்பட்டது. உதவி இல்லையேல் மனிதரின் வாழ்க்கையில் சமதர்ம செழுமையிராதுப் … Continue reading →

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-9)

9) காதல் அப்படியொரு இனிப்பு. கசப்பை சகிக்கும் இனிப்பு. நினைவை தொலைக்கமுடியாமல் நினைத்து நினைத்து சாகத் துடிக்கும் இதயத்தை உணர்வுகளால் அடைத்துக்கொள்ளும் இனிப்பு. விஷம் கக்கும், ஞானம் தரும், நாகரிகம் வளர்க்கும், மனிதமூறச் செய்யும், மானுடப் பிறப்பை இன்பக் கடலில் மூழ்கடித்து சாகச் சாக உயிர்களைப் பிறப்பிக்கும் காதல். ஆனால் காதல் ஒரு பொருளில்லை. கடையில் … Continue reading →

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-8)

பசி ஒரு பெருங்கொடுமை. பசியொரு உயிரோடு கொல்லும் மரணத்திற்குச் சமம். ஜீவராசிகள் வாழ்வதன் காரணத்தை உடல்மையமாக சோதித்துப் பார்த்தால் கடைசியில் வயிற்றிற்காக மட்டுமே வாழ்வதாக ஒரு பதில்கூட கிடைப்பதுண்டு. மரணத்தின் வேர் எதுவென்று காட்ட ஒரு சொட்டுத் தண்ணீராலோ அல்லது ஒரு பிடி உணவாலோகூட முடிந்துவிடுகிறது. பசியின் கொடுமையால் மட்டுமே மிருகங்கள் மிருகத்தைக் கொல்கிறது. மனிதனும் … Continue reading →

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக