Tag Archives: பிறப்பு

13 என் மரணத்தைப் பிய்த்துப் பாதி தின்றவள்….

வாழ்வின் பாடங்களில் கிழிந்த பக்கங்களின் ஒவ்வொன்றையும் எடுத்து தன் சிரிப்பில் ஒழுகும் எச்சிலால் ஒட்டிவிடுகிறாய்; இதயம் தைக்கும் ஊசியென என் அறுந்த மனதின் கிழிசல்களில் உன் நிறைவுறாத வார்த்தைகளைப் போட்டு பிறந்த பயனை நிரப்புகிறாய்; தத்தி தத்தி நடந்துவந்து எனை எட்டியுதைக்கும் ஒற்றை உதையில் என் மெத்த கர்வத்தையும் இலகுவாக உடைத்து உடைத்து வீசுகிறாய்; நீ … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

44 அணையா உயிர்விளக்கை ஒளிர்க்கும் மனித(ம்) பலம்!!

திறக்காத கதவின் மனத் தோன்றல்களாகவே சப்தமிழந்துக் கிடக்கின்றன நம் முயற்சியும் லட்சியங்களும் நம்பிக்கையும்.. வீழும் மனிதர்களின் ஏழ்மை குறித்தோ அவர்களின் பசி பற்றியோ பிறர் நலமெண்ணி வாழாமையோ மட்டுமே வீழ்த்துகிறது – நம் சமூகம் தழைக்கச் செய்யும் மனிதத்தை; தெருவில் கிடப்பவர் யாரென்றாலும் விடுத்து அவர் மனிதர் என்பதை மட்டுமேனும் கருத்தில் கொண்டு அக்கறை வளர்த்தல் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

93 ஞானமடா நீயெனக்கு…

1 இருட்டில் தெருவின் ஓரம் நின்று வாசலில் போகும் வரும் வண்டிகளின் வண்ண விளக்குகளை உனக்குக் காட்டினேன்; அவை சென்று தெருமுனை திரும்பும்வரை நீ கண்கொட்டாமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தாய் நானும் உன்னையே பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு வண்டி உன்னைக் கடந்துப் போய் தெருமுனை எட்டியது – நீ இருட்டில் தெரியுமந்த வண்டிவிளக்கின் வண்ணத்தில் ரசனை … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , , | 16 பின்னூட்டங்கள்

41 வயிற்றரிசி இனாம் வேண்டாம்; ஒற்றை நல்ல அரசு போதும்!!

கறிகடைகளில் உயிர்பயத்தில் நிற்கும் கோழிகளாகவே நாங்கள் – ஓட்டளித்துவிட்டு வீடுவந்த உயிர்பலிகள்! அம்மா வந்தால் மாறும், ஐயா வந்தால் மாறும் என்று நம்பியிருப்பவர்களை எந்த கொய்யா வந்தும் அத்தனை மாற்றிடவில்லை; இருந்தும் சரியானவர்களை தேடித் தேடியே நீள்கிறதிந்த இழிபிறப்பு! அரசியல் ஒரு சாக்கடை என்றே நம்பி வளர்ந்த சங்கிலி யானையான எங்களுக்கு – இன்னுமந்த சங்கிலி … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

உன் புத்தகப் பை நிறைய, அந்த கண்ணீரும் சிரிப்பும்!!

நீ பிறந்தாய் எனக்குள் ஒரு பூ பூத்து அப்பா எனும் வாசமாய் உடலெங்கும் கமழத் துவங்கியது.. பின் – நீ வளர வளர அந்த அப்பாயெனும் வாசத்தால் நானும் உலகெங்கும் மணம் பரப்பி மதிப்பால் நிரம்பி நின்றேன்; இன்றும் – உன்னிடம் நான் பெற்ற – பெரும் – பாடங்கள் ஏராளம், ஏராளம்; என் குழந்தை … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்