Tag Archives: போராளி

33, ஒற்றுமையின் வெளிச்சம் ஊரெல்லாம் பரவுகிறது!!

இறந்த போராளிகளின் உடல்கள் நைந்துக்கிடப்பதுக் கண்டு நெஞ்சு பிளந்தது, அருகே நின்று பார்த்தவன் சொன்னான் அதலாம் பிணங்களென்று; இல்லை. பிணங்கள் இல்லை அவர்கள்; உயிர் விட்டெரியும் எம் விடுதலை தீபங்கள், நாளைய எங்கள் வாழ்வின் ஒளியாய் வீசி – உயிர்த்திருக்க காத்திருக்கும் தியாக விளக்குகள் என்றேன்; உணர்ச்சிவசப் பட்டு அவன் இவ்வுலக மனிதரைப் போலவே சிரித்துக் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

19 ஈழக் கல்லறைக்குள்ளிருந்து ஒரு கடிதம்…!!

போராடி; தொலைத்தது போல் வருடங்கள் மௌனமாய் தொலைகிறதே., தேசம் கடந்து போன என் மக்கள் – ஊர்திரும்பா வேதனையில் ஈழக் கனவும் குறைகிறதே; மாவீரர் தினம் கூட – ஒரு பண்டிகையாய் வருகிறதே மலர்வளையம் வைத்து வணங்கி – மக்கள் விடுதலை மறந்துப் போகிறதே; வெடித்துச் சிதறி வீழ்ந்த தலைகளின் – சொட்டிய ரத்தம் எப்படி … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

18 விடுதலையின் வெள்ளை தீ; பிரிக்கேடியர் சுப. தமிழ்செல்வன்!!

உன் வாழ்க்கை கதைநூறு சொல்லும் முகமோ அத்தனையையும் ஒற்றைசிரிப்பில் வெல்லும், காலம் உன் களப்பணியை நினைவில் கொள்ளும் தமிழர் வாழும்வரை உன்புகழும் நில்லும்! வானம் தொடுங் காலம்வரை சமரிலும் அரசவை படையிலும் நீயே தூணானாய்; எங்களின் காலம் சொல்லா தீர்ப்பிற்கு – உன் மரணத்தால் ஒரு தோல்விசாசனம் எழுதிப் போனாய்! மீண்டும் வெற்றிமுரசு கொட்டும்வரை ஓயாது … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

9 கேட்ட கதையும்; கேட்காத பாடமும் – கரும்புலிகள்!!

கரும்புலிகள் கதை கேளு மரணமெல்லாம் தூசி பாரு, ரத்தம் சொட்டிய மண்ணெடுத்து அவர்கள் உயிர்வாசம் நுகர்ந்து பாரு; கரும்புலிகள் உதிரம் பூத்து கடல்கூட அழுது சிவந்தது பாரு – உயிரும் வருடமும் பல; பலிகொடுத்தும் ஈழம் மட்டும் – இலங்கையாச்சி பாரு; மில்லர் போல பலபேரின் இலட்சியக் கனவு சாமாதியில் பாரு – கமலுக்காக ஒரு … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

8 பிணமென்றே பெயர் வைத்தேன்

   பிணங்களின் எரியும் புகையில் புகுகிறது பள்ளி சீருடைகள்;   பிணங்களின் அழுகிய நாற்றத்தில் மறந்தன மரண பயம்;   பிணங்களின் முறிந்த உறுப்பில் முடங்கின உயிர் பறித்த வலி;   பிணங்களின் தெருவோர குவியலில் அறுந்தன உயிரின் ஆசை;   பிணங்களின் பிணமென்னும் பெயரில் கிடக்கின்றன எம் – வீரமும் உறவுகளும்;   பிணமென்றே பெயர்வைத்தேன் வேறென்ன … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்