Tag Archives: யாதார்த்தக் கவிதைகள்

ஞானமடா நீயெனக்கு – 64

அது எப்படியோ – மூத்த பிள்ளை இளைய பிள்ளையால் சலித்துவிடும் என்கிறார்கள்; எனக்கு நூற்றியோர் பிள்ளைகள் பிறந்தாலும், நீயும் சலிக்கமாட்டாய் – மீதம் – நூறு பிள்ளைகளையும் சலிக்கவிட மாட்டாய்’ என்று தெரியும்!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 63

ஒவ்வொரு பெற்ற வயிறும் வளர்த்த தோளும் தன் குழந்தைக்கான அன்பையும் ஆசைகளையும் எழுதிவைக்க நாட்குறிப்பினை தேடுவதில்லை; தேடி வைத்திருந்தால் – ஒவ்வொரு வீட்டிலும் ஞானமடா நீயெனக்கும் – ஞானமடி நீயெனக்கும் – நிறைய கனத்திருக்கும்!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 62

உன் நெடுந்தூர பயணத்தில் உனை போல் ஒரு பூ – உன் வீட்டிலும் பூக்கும்; அன்று – அதற்கு நீ தரும் நிறைய முத்தங்களில் ஒன்றிலாவது நிறைந்திருக்கும் – நானுனக்கு கொடுக்கும் நிறைய முத்தங்களின் அன்பு!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

61 குழந்தைகள் காணும் உலகம் புதிது; கவனம் கொள்க!!

அடுப்பு எரிகிறது.. நான் வெளியே கூவிச் சென்ற கீரைகாரரிடம் கீரை வாங்க வாசல் நோக்கி போகிறேன் நீ அடுப்பினை பார்க்கிறாய்.. அடுப்பில் நெருப்பு சிவப்பாக கனன்று எரிகிறது உனக்கு நெருப்பு அதிபுதிது முதன் முதலாக இன்றுதான் அடுப்பின் சிவந்த – நெருப்புத் துண்டுகளை பார்க்கிறாய், நெருப்பு சிவக்க சிவக்க – நெருப்பின் மேல் உனக்கு ஆசை … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

பிறப்பின் முதலெழுத்து; அப்பா!!

அன்றெல்லாம் அப்பாவின் கைபிடித்துச் சென்றே உலகம் பார்த்த வியப்பு.. அப்பா.. நடக்கும் தெருவெல்லாம் வாழ்வின் பாடங்களை கற்பிப்பார்.. வானத்தின் மேகப் பூக்களை கூட யானையாகவும் குதிரையாகவும் பார்க்க சொல்லி வளர்த்த அப்பாக்கள் எப்படியோ மறந்தே போகிறது – பிள்ளைகளுக்கு(?)!! மீன் வாங்கினால் பூ வாங்கினால் தெருவில் பழம் விற்கும் மூதாட்டியிடம் பழம் வாங்கினால் கூட அவர் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , | 14 பின்னூட்டங்கள்