Tag Archives: வித்யாசாகர் கவிதைகள்

11 ஓ………. உலக தமிழினமே..

புதைகுழிகளை தோண்ட அரசானையாமே ? எங்கேனும் என் இறந்த மகனின் அல்லது கணவனின் எலும்புத் துண்டு கிடைக்குமாயின் கொடுத்து செல்லுங்கள் – சிங்கள நாய்கள் தெருவோரம் வந்தால் எடுத்து வீசலாம் – ஏதேனும் இரண்டு தமிழச்சிகளாவது மிட்சப் படட்டும்!! ———————————————-

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

10 ஓ………. உலக தமிழினமே..

கர்ப்பிணி பெண்களின் வயிறு கிழித்து தமிழனென்பதால் சிசுவை கூட கொண்றுபோட்ட சிங்களரா தமிழரை காப்பர்? ஓ………. உலக தமிழினமே வெட்கம் கொள்ளாதே அவன் காலுக்கு செருப்பினும் கேவலமாக எண்ணப் படுகிறோம் இங்கு; ஈழத்தில் முடிந்தால் சற்று கோபப் படு; யாரேனும் இருக்கிறீர்கள் என்றாவது தெரிந்துக் கொள்ளட்டும் சிங்களவர்!! ————————————————

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

9 கேட்ட கதையும்; கேட்காத பாடமும் – கரும்புலிகள்!!

கரும்புலிகள் கதை கேளு மரணமெல்லாம் தூசி பாரு, ரத்தம் சொட்டிய மண்ணெடுத்து அவர்கள் உயிர்வாசம் நுகர்ந்து பாரு; கரும்புலிகள் உதிரம் பூத்து கடல்கூட அழுது சிவந்தது பாரு – உயிரும் வருடமும் பல; பலிகொடுத்தும் ஈழம் மட்டும் – இலங்கையாச்சி பாரு; மில்லர் போல பலபேரின் இலட்சியக் கனவு சாமாதியில் பாரு – கமலுக்காக ஒரு … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

8 பிணமென்றே பெயர் வைத்தேன்

   பிணங்களின் எரியும் புகையில் புகுகிறது பள்ளி சீருடைகள்;   பிணங்களின் அழுகிய நாற்றத்தில் மறந்தன மரண பயம்;   பிணங்களின் முறிந்த உறுப்பில் முடங்கின உயிர் பறித்த வலி;   பிணங்களின் தெருவோர குவியலில் அறுந்தன உயிரின் ஆசை;   பிணங்களின் பிணமென்னும் பெயரில் கிடக்கின்றன எம் – வீரமும் உறவுகளும்;   பிணமென்றே பெயர்வைத்தேன் வேறென்ன … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

யான் பெற்ற இன்பம்; பெருக இவ்வையகம்..

உறவுகளுக்கு  வணக்கம், யாழ்தேவியின் நட்சத்திரப் பதிவராக போற்றப் படுபவர்களின் படைப்புகள் தினக்குரல் இதழில் வெளியிடப் படுகிறதென்பதை தெரிவிக்க வேண்டி, நம் படைப்புகள் வந்துள்ள ஒரு பக்கத்தை தங்களின் பார்வைக்கென இணைத்து, யாழ்தேவியில் இணைந்து பயன் பெறவும், தினக்குரலுக்கு நன்றியறிவிக்கும் முகமாகவும், இப்பதிவு இடுவதோடு; ஈகரையின் கவிதை மற்றும் கட்டுரை போட்டிக்கான இணைப்பையும் கீழே கொடுத்து மகிழ்கிறோம். http://www.yaaldevi.com/?country=உலகம்&countryID=0Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்