Tag Archives: வித்யாசாகர்

35 கவிதையில்லை; ஒரு கடிதம்!

ஒவ்வொரு புள்ளியிலாய்  இதயங்கள் சந்தித்தே – தூர  விலகி நிற்கின்றன.   எனக்கும் நேரிடுகிறது அந்த நெருங்கி பிரியும் புள்ளியின் நிறைய வலிகள்.   எல்லோரையும் காதலிக்க ஆசை எல்லோரையும் கட்டிக் கொள்ள ஆசை கட்டல் ஏன் காமத்திற்கா?   காமம் அறுக்காத உணர்வுகள் பொங்கியெழுந்த ஆசையின் நிர்வாணத்திற்கு – உடல் என்னும் சோறு போடவா??? … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

ஒரு நடிகனும் ஒரு நடிகையும்; ஒரு காட்சி!!

“நெருப்பு – எரிந்ததடிப் பெண்ணே   உன் நினைவு – உலகை மறந்ததடி பெண்ணே  அன்பு – கனன்றதடி பெண்ணே  ஆயுளை பாதியாய் – மௌனம் குறைத்ததடி பெண்ணே  உயிரில் – பூத்தாய் பெண்ணே    உள்ளம் – நீண்டு நிறைந்தாய் பெண்ணே     என் சகலமும் – ஆனாய் பெண்ணே   இல்லை யெனக்  கொண்று – மீண்டும்   ஒரு சின்ன பார்வையில் பிறக்க செய்தாயடிப் பெண்ணே!!”     கட்.. கட்.. கட்..   நில்லு நில்லு இது பத்தாது, காதல் கவிதை படிச்சா அதுல ஒரு உயிர் இருக்கணும்.., பாடம் படிக்கிற … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

160 யாரை காக்க; யாரை கொல்வதோ பராபரமே!!

வெள்ளிப்பூக்கள் தங்கப் பலகை வைடூரிய கொண்டாட்டங்கள் மின்னுகின்றன தமிழர் பலர்  ஆங்காங்கே – வீழ்ந்த – சுவடுகளின் மீதேறி; ———————————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

159 யாரை காக்க; யாரை கொல்வதோ பராபரமே!!

குடி அறுந்தாலும் குடிக்கலாம்,   கொடி பறந்தாலும் குடிக்கலாம்,   எவர் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் – குடிக்கலாம்,   காரி முகத்தில் உமிழ்ந்தாலும் குடிக்கலாம்,   ஏதேனும் – ஒற்றை காரணம் சொல்லிக் குடிக்கலாம்,   மானம் காற்றில் பறந்து கூத்தாடிப்போகும் வரை குடிக்கலாம் –  டாஸ்மாக்கிற்கா பஞ்சம்?? ———————————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

158 யாரை காக்க; யாரை கொல்வதோ பராபரமே!!

இழிவு நிலை எச்சில் குடிக்கிறது,   எவன் சொன்னதும் சொல்லாததும் கூட வலிக்கிறது,   வந்தவர் போனவர் வாரி தூற்றுகிறார்,   நன்றி மறந்தும் நிறையவே பேசுகிறார் –   தட்டிக் கேட்டால் தவறென்கிறார்,   விட்டுப் பார்த்தால் பிரித்தே பேசுகிறார்,   எப்படியோ முடிவில் தன்னையும் தமிழரென்கிறார் ! ———————————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக