வெல்லும் ஈழம் தான்; முள்ளிவாய்க்கால் முடிவு தான்!!

ர்தாளி அறுத்த கதை
உறவு மானம் பறித்த கதை
என் தமிழர் ரத்தம் குடித்த கதை
இவ்வுலக மறியும் தெரிஞ்சிக்கோ; உன் முடிவை நீயும் புரிஞ்சிக்கோ;

ஈழ-மது  மலரும் மலரும்
என் பாட்டன் மண்ணில் உறவுவாழும்
காலம் போட்ட முடிச்சமாத்தி போட்ட முண்டம் நீயடா
உனக்கான பதிலை யினி ஊரு மொத்தம் சொல்லுண்டா;

ஊருவிட்டு; வந்தவன் நீ
வீடு புகுந்து; தின்னவன் நீ
சோறு தின்ன மிச்சதுக்கு மண்ணை சேர்த்துத் கொண்டதெல்லாம்
ஊருக் கண்ணில் குத்துதே; உன் தலையெழுத்தா மாறுதே;

முள்ளிவாய்க்கால் முடிவுடா
உன் கொட்டம் அடங்கும் கணக்குடா
நீ தொட்ட பெண்கள் அத்தனையும் விட்ட சாபம்; சாப(ன்)டா
அவள் ரத்தம் சுத்தம் பாருடான்னு; பறக்கும் வெற்றிக் கொடி காட்டு(ன்)டா;

கர்ப்பிணிய கிழிச்சியே
குழந்தை காலை தலையை உடைச்சியே
வயசான கிழத்தைக் கூட வீழும்வரை அடிச்சியே
என் மானத்தி மானம் பரப்பி தமிழர் புகழை கெடுத்தியே;

ஒவ்வொன்னா வீழுது
உன்  கிரிடம் சாயப் போகுது
கொள்ளும்  களியும் தின்னும் போது
எங்க அலறல் சப்தம் புரியு(ன்)டா;

நீதி யொன்று உண்டுடா
உண்மை யென்றும்  வெல்லு(ன்)டா
விட்ட சொட்டு ரத்தம் கூட –
எம் விடுதலையா முளைக்கு(ன்)டா;

எம்  மடியில் கைய வச்சவன்
காம  ரத்தம் குடித்தவன்
எல்லோரும் வாங்கடா, கதற கதற உருப்பறுத்த
கையாலயே இனி சாவுடா;

கத்தி கத்தி அழுதோமே
ஈ மொய்க்க கிடந்தோமே
முள்ளுக் கம்பி பின்னாலே எம்
வரலாறை புதைச்சோமே;

தொட்ட இடம் குத்துச்சே
தட்டு தூக்கி நின்னுச்சே
ராஜபாட்டை ஆண்ட மக்கள் தெருத்தெருவா அலஞ்சிச்சே
வீழ்ந்த நெருப்பில் கருகி கருகி மொத்த இனமும் அழிஞ்சிச்சே
அத்தனைக்கும் பதிலுடா; எம் மக்கள் ஈழம் வெல்லு(ன்)டா!!
————————————————————————–
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

7 Responses to வெல்லும் ஈழம் தான்; முள்ளிவாய்க்கால் முடிவு தான்!!

  1. mangal's avatar mangal சொல்கிறார்:

    முள்ளிவாய்க்கால் முடிவுடா
    உன் கொட்டம் அடங்கும் கணக்குடா

    உங்கள் வரிகளில் எங்கள் வலிகள்
    வெல்வோம் ஈழம் …….

    Like

  2. sanmugakumar's avatar sanmugakumar சொல்கிறார்:

    தங்கள் பதிவை இணைக்க தமிழ் திரட்டிகளில் முதன்மையான திரட்டியில் பதிவை இணைத்து பயன் பெறுங்கள்
    http://tamilthirati.corank.com

    Like

  3. mathisutha's avatar mathisutha சொல்கிறார்:

    எல்லாம் சரி சகோதரம்… அப்படியானால் ஈழத்தில் இன்னொரு போர் வேண்டும் என்பதா எல்லோர் கருத்தும்….

    அன்புச் சகோதரன்…
    ம.தி.சுதா
    என் மலர் விழியை கண்டிங்களா ?

    Like

  4. அன்பு மதிசுதாவிற்கு வணக்கம். இல்லை உறவே; மீண்டும் அங்கு இன்னொரு போரை வரவழைத்து அங்கே ரத்தத்தைப் பார்க்க எல்லாம் துளியும் எண்ணமில்லை.

    //தொட்ட இடம் குத்துச்சே
    தட்டு தூக்கி நின்னுச்சே
    ராஜபாட்டை ஆண்ட மக்கள் தெருத்தெருவா அலஞ்சிச்சே
    வீழ்ந்த நெருப்பில் கருகி கருகி மொத்த இனமும் அழிஞ்சிச்சே
    அத்தனைக்கும் பதிலுடா; எம் மக்கள் ஈழம் வெல்லு(ன்)டா//

    இதற்கர்த்தம் என்னவென்று நினைத்தீர்கள்? மீண்டும் அங்கே சண்டை இட்டு இருக்கும் மக்களையும் துன்புருத்துவதாய் அல்ல, எனைப் போல் தேசம் விட்டு வந்து தூரமுள்ள மக்களின் ஒற்றுமையினாலும், எஞ்சியுள்ள என் இளைய சமுததாயத்தின் மீதான நம்பிக்கையிலும் சொல்ல முயன்றது மதிசுதா.

    ஐ.நா கூட போர்க்குற்றத்தை உறுதி செய்துள்ள இந்நேரத்திள் இதுபற்றிய எண்ணத்தை அழுத்தமாகப் பதிந்து தூரமாக நின்று தட்டும் கைகளை ஒன்றாக இணைக்கும் முயற்சி சுதா..

    Like

  5. ஆம் மங்கள்; அவன் முடிவை அவனே தான் அந்நாளில் தேடி வைத்துள்ளான். எதை எல்லாம் நமக்கு எதிராக என்று நினைத்துச் செய்தானோ அதெல்லாம் இனி சாட்சியாய் நின்று அவனையே கொள்ளும்’ என்பதை நினைவுருத்தத் தான், அப்படி முள்ளிவாய்க்கால் (அவனுக்கு) முடிவென்று எழுதினேன்..

    Like

  6. சார்வாகன்'s avatar சார்வாகன் சொல்கிறார்:

    ஈழம் வெல்ல வேண்டும்.
    வாழ்த்துக்கள்

    Like

  7. மிக்க நன்றி சார்வாகன். இப்போதைக்கு இந்த நம்பிக்கைதான் முழு அளவில் தேவைப் படுகிறது. இந்த நம்பிக்கை நிச்சயம் இழப்பிற்கான நியாயத்தை பெற்றுத் தரும், அந்த நியாயம் அம்மக்களுக்கான மண்ணையும் மீட்டுக் கொள்ளும்!!

    Like

mangal -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி