Monthly Archives: ஜூன் 2011

உன் புத்தகப் பை நிறைய, அந்த கண்ணீரும் சிரிப்பும்!!

நீ பிறந்தாய் எனக்குள் ஒரு பூ பூத்து அப்பா எனும் வாசமாய் உடலெங்கும் கமழத் துவங்கியது.. பின் – நீ வளர வளர அந்த அப்பாயெனும் வாசத்தால் நானும் உலகெங்கும் மணம் பரப்பி மதிப்பால் நிரம்பி நின்றேன்; இன்றும் – உன்னிடம் நான் பெற்ற – பெரும் – பாடங்கள் ஏராளம், ஏராளம்; என் குழந்தை … Continue reading →

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

இயக்குனர் பாலாவின் இன்னொரு திரைக் காவியம் – அவன் இவன்!!

ஒவ்வொரு மனிதரின் ஒவ்வொரு விதமான வாழ்க்கையின் வெவ்வேறு காட்சிகளை ஒவ்வொன்றாய் தன் ஏட்டில் பதிந்துக்கொண்டுதான் வருகிறது ஒவ்வொரு திரைப்படமும். அதிலும் எளிய மக்களின் வாழ்தலை சமகாலப் பதிவாக்கும்  அரிய திரைப்படங்கள் தமிழரின் கலைத் திறனை மெய்ப்பிக்கும் சான்றாகவே தற்காலங்களில் வந்துக்கொண்டிருக்கின்றன. அவ்வகையில், ஒரு எழில்மிகு கிராமத்தில் வசிக்குமொரு குடும்பத்தின் இரு மகன்களையும், அவர்களின்  யதார்த்த வாழ்க்கையினையும் … Continue reading →

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்

ஒரு தோசையும்; தொட்டுக்க நாலு மாத்திரையும்.. (சிறுகதை)

குடும்பம் ஒரு கோவில் என்பார்கள்; அது இந்த குடும்பத்திற்கே பொருந்தும். மூன்று அண்ணன் தம்பிகளும், அவர்களின் மனைவியர் மற்றும் குழந்தைகளும் அவர்களுக்கு நடுவே ஒரு இதய நோயாளியான தந்தையுமென திறக்கிறது இக்கதைக்கான கதவுகள். “ஐயோ… தாத்தா!!!!!!!!!!!!!!!!” ”அம்மா தாத்தா குளிக்கிற அறை கதாவான்டையே விழுந்துட்டாரு” “என்னடி சொல்ற???!!!!” “உண்மையா தாம்மா, வந்து பாரேன்…” “ஐயோ ஆமா…, … Continue reading →

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , | 18 பின்னூட்டங்கள்

உனக்காய் சேர்த்துவைத்த வார்த்தைகள் அத்தனையும்!!

மணமகன் : தா. அருள்       மணமகள்: ஜெ. சுஜிதா          மணநாள்: 05.06.2011 வாழ்த்துப் பா….………………………………. என் உயிருக்குயிராய் இருந்தவளை உயிராகவே சுமந்தவளே; என் தங்கை இறந்தா ளென இன்னொருத்தியாய் வந்தவளே; என் தாய்; உனக்காக சுமக்காத பத்து மாதத்தை எனக்காக மனதில் சுமந்தவளே; சுஜிமா’ என்று நினைத்ததும் – அண்ணாயென ஓடிவந்து நிற்கும் – அன்பின் … Continue reading →

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நீடுவாழ்வாய்; உன் பேரும் வாழும்!!

மணமகன் : சா. சுரேந்தர் மணமகள்: க.ப்ரீத்தி மணநாள்: 03.06.2011 கல்லும் பூக்கிறது காயும் இனிக்கிறது நெஞ்சம் நிறைத்துவிட அவள்வேண்டி நெடுந்தூரம் வந்தோனின் நினைவெல்லாம் – இனி அவள் வாசம் பொங்கும்; வசந்தத்தின் அர்த்தமினி பிரீத்தியும் என்றாகும்! குறிஞ்சிப் பூக்கும் நடையில் பூத்தவளே கொஞ்சும் தமிழ்போல் பேறு பல வாய்த்தவளே சொல்லிமுடிக்காப் பல கதை கோர்த்து … Continue reading →

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்