Monthly Archives: ஜூன் 2013

பிரியாத மனங்களிரண்டு பேசிக்கொண்ட நினைவுதனில்..

மனதிற்குள் மறக்காத முகம் அவளுடைய முகம்; இதயம் முழுதும் சுமக்கும் நினைவுகளில் சிரிக்கவும் அழவும் வைப்பவள் அவள் மட்டுமே; அவளுக்கும் எனக்கும் அன்று அப்படி ஒரு காதல் இருந்தது.. நான் அழுதால் அவள் அழுவாள் நான் சிரித்தால் அவளும் சிரிப்பாள் ஏனிப்படியிலேறி மேலிருந்து தலைகீழ்விழும் குழந்தையைப் போல மனசு மேலேறி மேலேறி மீண்டும் அவளின் காதலுள் … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

திசைமாற்றிய திருப்பங்கள்.. (இணைய கவியரங்கக் கவிதை)

எனையாளும் ஐயனுக்கு மடிதாங்கும் அன்னைக்கு ஒளியாகி வளியாகி உயிராகி உலகின் காட்சிகளாய் விரியும் பரமனுக்கே முதல்வணக்கம்! மொழியாகி பேச்சின் அழகாகி முதலாகி எழுத்தின் மூலமாகி விழுதாகி எங்கும் செறிவாகி தெளிவான எந்தன் அறிவே; தமிழே வணக்கம்! நெருப்பின்றி நீளும் ஒளியாகி மின்தெருவெங்கும் தமிழின் சுவையாகி இலக்கிய வணப்பிற்கு பலம்சேர்க்கும் இடமாகி எம் கருத்துக்கும் செவிசாய்க்கும் அவையே; … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.., கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்-12-ஆசை)

ஆசை ஒரு நெருப்பு மாதிரி. வாழ்வில் வெளிச்சத்தை மூட்டும் தீ ஆசை. கனவுகளை விற்று காசாக்கித்தரும் வித்தை ஆசைக்கே கைவரப்பட்டிருக்கிறது. முச்சந்தியில் நிற்பவரை மாடிவீட்டிற்கு அனுப்பவும் மாடிவீட்டில் இருப்பவரை வானத்தில் பறக்கவிடவும் ஆசையால் முடிகிறது. ஆசைப்பட்டவன் மட்டுமே எண்ணியதை முடிக்கிறான். உலகின் அச்சாணி பிடுங்கி தான் விரும்பியவாரு உலகத்தை அசைத்துப் பார்க்கிறான். மூடிய கண்களுக்குள் மூவுலகின் … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

உழவன் கணக்கில் உயிர்தான் ஈவு

உடம்பு சுடும் சூரியனை விழுங்கி மிதிக்கும் வரப்பெல்லாம் வியர்வையால நனைச்ச மண்ணு உழவர் உயிரைப்பறிக்கும் பச்சமண்ணு; புலரும் காலைப் பொழுதை எமக்கு ஒப்பாரியா கொடுத்த மண்ணு படி அரிசி நெல்லு தேடி தெருவெல்லாம் எமை விதைச்ச மண்ணு; பாவிமக பொறந்த நேரம் பச்சவயல் காயுந் தூரம் வாழ்க்கையது விடியலை சாமி, ஒரு மரணம் கேட்டும் கிடைக்கலை … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

போதைச் சேற்றில் மனித நாற்றுகள்..

தெரு தெருக்குச் சாராயம் வழிநெடுக்கப் போராடும் வறுமைக்குக் குழிதோண்டும் வாழ்க்கைக்கு பாதாளம்! இளமைக்கு இடராகும் இயற்கைக்கு எதிராகும் இன்பத்தின் எல்லையிலும் போதை; துன்பத்தின் துளிராகும்! கல்விக்கும் கால் சறுக்கும் கடலில் உப்பாய்ச் செல்வங் கரையும் சந்ததிக்கும் குடிகாரப் பழிசூட்டும்; சாகும்போது(ங்)கூட ச்சீ இவனான்னு பிறர்வாயில் பிறப்பு நாறும்! ஒருநாள்னு குடிப்பவனும் ஓலைக் குடிசையில் அடிப்பவனும் மாடிவீட்டில் … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்