Daily Archives: செப்ரெம்பர் 22, 2014

கவனிக்கவேண்டிய காருண்யம்..

10 பொதுக் கழிவறைகளுக்கு வாயிருந்தால் காரி உமிழ்ந்துவிடும் மனிதர்களின் முகத்தில்.. நிறைய ஜென்மங்களுக்குப் புரிவதேயில்லை – தான் உபயோகித்த இடத்தை தானும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்று; போகட்டும்.. போகட்டும்.. குறைந்தபட்சம் ஒரு வாலி நீரேனுமள்ளி ஊற்றிவிட்டுப் போவார்களெனில் (?) அதுவரை – கழிவறைகளுக்கு வாயில்லாமலே போகட்டும்!! —————————————————— வித்யாசாகர்

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கவனிக்கவேண்டிய காருண்யம்..

9 இரவில் தெரியும் நட்சத்திரங்களைப் போலவே நமது வாழ்வின் நாட்களும் கூடியும் குறைந்துமே இருக்கிறது, அதிலிருந்து ஒன்றிரண்டை யெடுத்து எளியோருக்காக பயன்படுத்திப் பாருங்களேன்; ஒன்றிரண்டு நட்சத்திரங்களேனும் மோட்சம் பெற்றுக்கொள்ளட்டும்!! —————————————————— வித்யாசாகர்

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கவனிக்கவேண்டிய காருண்யம்..

8 முருங்கைக் கீரை பறித்து விற்கிறாள்; அரைக்கீரை முளைக்கீரை என்றெல்லாம் குரலெழுப்பிப் போகிறாள், மாம்பழம் முருக்கு  சுட்டுக்கூட விற்பாளவள்; அவளின் கூன்விழுந்த முதுகின் மீதேறி தலைநரைத்த மயிர்களோடு ஆடி முதுமை வலிப்பதையும் அறியாது தனிமை சுடுவதும் புரியாமல் வெயில்  மழையில் தேயுமவளின் கால்களையும் கவனிக்காது, அவளைக் கடந்துபோய் பிறரிடம் கைநீட்டி பிச்சை வாங்கி வயிற்றை  சோம்பலால் … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கவனிக்கவேண்டிய காருண்யம்..

7 நாடு பிரித்துவிட்டேன், மொழி பிரித்துவிட்டேன், மதம் பிரித்துவிட்டேன், சாதி அட நன்றாகவே பிரித்துவைத்திருக்கிறேன்; வீட்டில் உற்றுப் பார்த்தால் ஐயோ; அங்கே ஆயிரம் பிரிவு.. அதைப் பற்றியெல்லாம் எனக்கெதற்கு வெட்கம் மானம் சூடு சொரனையெல்லாம்.. (?) பிரிவிலும் பிளவிலும் விழுந்து எழுந்து எப்படியோ சாமி கும்பிட்டு பெரியாளாகி விடலாமென்றோ, திரைப்படம்  கண்டு அறிவைப் பெருக்கிக் கொள்ளலாமென்றோ, … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கவனிக்கவேண்டிய காருண்யம்..

6 இரவில் நடக்கிறேன் எத்தனைப் பூச்சிகள் இறந்தனவோ தெரியவில்லை; இரவில் நடக்கிறேன் எத்தனை மலர்கள் கசங்கினவோ தெரியவில்லை; இரவில் நடக்கிறேன் எத்தனைச் சுவடுகள் கலைந்தனவோ தெரியவில்லை; இரவில் நடக்கிறேன் இன்னும் – எத்தனைக் காலத்திற்கு இருளில்  நடப்பேனோ தெரியவில்லை!! —————————————————— வித்யாசாகர்