25, உன்னோடிருந்தால் பிரியும் உயிர்கூட இனிக்கும்..

333333333

1
ழைப் பெய்யும்
எல்லோரும் ஓடி வீட்டினுள்
அடைவார்கள்..

நான் ஜன்னலோரம்
வெளியே நிற்பேன்
நீ ஜன்னலோரம்
உள்ளே நிற்பாய்

மழைக்கு தெரியும்
உன்னையும் என்னையும்..
——————————————————-

2
டைக்கு
காய்கறி வாங்க வருவாய்

எழுதிவந்ததைப் போல்
மடமடவென்று சொல்வாய்

நான் அருகில்
ஒன்றையோ இரண்டையோ
உனக்காக வாங்கிக் கொண்டு
சும்மா நிற்பேன்

திரும்பிப் போகையில்
நீ முன்னே போவாய்
நான் பின்னே
பேசாமலே வருவேன்

வீடுவரை இப்படித்தான்
என்றாலும்
வீடு வந்ததும் சற்று நிதானமாக
நீ நடப்பாய்

நான்
வீடு வந்துவிட்டதே என்று
வேகமாக வருவேன்

உனக்கும்
எனக்கும்
நிழலளவில்
மனசுரசும்

நீ ஒருமுறை என்னை
திரும்பிப் பார்த்துவிட்டு
உள்ளே போய்விடுவாய்

நானந்தப் பார்வைத் தூக்கிக்கொண்டு
உலகெல்லாம் சுற்றிவருவேன்..
——————————————————

3
கா
தலுக்கு வசியமாகிற மாதிரி
உலகு
வேறெதற்கும் ஆவதில்லை

அதென்னவோ நான்
வெளிய வந்தால்
நீயும் வெளியே வருவாய்

உன்னை நினைப்பேன்
நீயும் நினைத்ததாய்ச் சொல்வாய்

ஏதேனும் வாங்கநினைத்தால்
நீயே வாங்கிவருவாய்

உன்னை பிடிக்குமென்று
சொல்ல நினைத்தால்
உனக்கும் மிக பிடிக்குமென்பாய்

ஏன்; உனக்குக்
காய்ச்சலென்றால் கூட
எனக்கும்
காய்ச்சல் வரக்காண்கிறேன்

எனக்கு இதனால் ஒரு
பெரிய பயமுண்டு –

நாளைக்கு ஒருவேளை எனக்கு
மரணம் வருமென்றால் –

உன்னை நினைக்காமலையே நான்
மரணித்துப் போகவேண்டும்..
——————————————————
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக