விளக்குகள் அணைந்தாலென்ன விடியல் இயல்புதானே காத்திரு; நட்சத்திரங்கள் தோன்றாவிட்டாலென்ன விட்டில் பூச்சி ஒன்று வரும் காத்திரு; கற்றது வேறானாலென்ன அறிவு உன்னுடையது தானே காத்திரு; யார்விட்டுப் போனாலென்ன உயிர் உண்டுதானே காத்திரு; உலகம் எப்படி இருந்தாலென்ன நீ உன்னை மாற்ற ஒரு காலம் வரும் காத்திரு; யாரால் எது செய்யமுடியா விட்டாலும் உன்னால் எல்லாம் முடியும் காத்திரு; நம்பிக்கைதான் வாழ்க்கை நம்பு, நம்பிக்கையோடு எழுந்து இந்த உலகம் பார் யாரோ போனாலும் யாரோ வருகிறார்கள் ஏதோ போனாலும் ஏதோ வருகிறது போனது கிடைப்பதுமில்லை வருவது நிற்பதுமில்லை; பிறகேன் வருத்தம் ? எல்லாம் மாறும், நம்பியிரு பூக்கள் நிறைந்த காடுகளில் ஒரு மலர் உதிர்வதும் ஒரு மலர் பூப்பதும் இயல்பு எனில் எல்லாம் மாறுவதும் கூட இயற்கையின் இயல்புதானே? பிறகு நீயென்ன? நானென்ன? போவதை விடு வாழ்வதை எண்ணிக் காத்திரு; இருக்கும் காலம் அத்தனையும் உயிர் மிக்கவை, இந்த உலகம் உயிர்கள் வானம் பூமி மழை கடல் காற்று சூரியன் நிலா காடு அத்தனையும் உயிர் மிக்கவை அவையெல்லாம் உனக்காகக் காத்திருக்கிறது நீ தான் ஏதோ ஒன்றிற்காக மட்டுமே மயங்கி காத்திருந்து பிரிந்து ஒடுங்கி ஒன்றிற்காக மட்டுமே அழுது ஒன்றிற்காக மட்டுமே சாகிறாய் ஒன்று போனால், எல்லாம் போனதாய் முடிகிறாய்; சற்று யோசி; சாதல் பிழையன்று தனித்து வலித்து சாதல் சரியுமன்று; வாழ்ந்துக்காட்டப் பிறந்தவர்கள் நாம் வாழ்தலே விதி, வாழ்தலே வரம்; சரி சரி; விடு நிறைய யோசிக்காதே நீ உயிர்த்திருக்க உள்ளிழுக்கும் காற்று இந்த பிரபஞ்சம் வரை நிறைந்தேயிருக்கிறது; போ மிச்சமிருக்கும் நாட்களையேனும் மகிழ்வோடு வாழ்ந்துவிடு!! -------------------------------------------- வித்யாசாகர்
வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 866,145
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச
திருக்குறள் படிக்க
முகில் பதிப்பகம் பார்க்க
அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..
நவம்பர் 2021 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 ஆன்மிகக் கதைகள்..
படைப்பாக்கப் பொதுமங்கள்
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
காத்திருக்கிறோம் கவிஞரே!!
அழகான கவிதை
LikeLike
நன்றி ஐயா. மிக நல்ல ஊக்கம் அளிக்கின்றீர்கள். வாழிய நலம்.
LikeLike