Author Archives: வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!

மே- 18 அல்ல; மொத்த தமிழருக்கான தீர்வு இது!!

மண் மலை காற்று ஆகாயம் கடல் எங்கிலும் யாரவது மனிதர்கள் இருக்கிறீர்களா??? வருத்தப் படாதீர்கள். இது உங்களை புண்படுத்துவதற்கான கேள்வியல்ல. மனிதம் என்பதை மீறிய நிறைய நாட்களுக்குப் பின் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் நாமெல்லோரும். அருகே துடிப்பவனை பார்த்து கருணை கொள்ளாத மனசு, எங்கோ துன்புறும் சக உறவை எண்ணி பதறாத உயிர்ப்பு, தன்னால் இயன்றதை … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , | 32 பின்னூட்டங்கள்

33 விழுங்கித் தொலைத்த மானுடம்!!

“எங்கோ எதற்கோ விழுங்கித் தொலைத்த மானுடம்.. இரந்து இரந்து கொடுக்கத் திராணியின்றி வாங்கத் துணிந்த மானுடம்.. களவு செய்து கபடமாடி கற்பு பறித்து; தொலைத்து; கயவரோடு கூடி காலம் போக்கும் மானுடம்.. எடுத்து வீசத் துணியாத விட்டு ஒழிக்க இயலாத உடலை – பிடுங்கியும் புலம்பும் பிரிந்தும் பிறரை நோவும் சுயநல மானுடம்.. பகுத்துப் பாராத … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

2 கல்லறைகளின் மீதாவது உறங்கி; உயிர்திருப்போம்!

எம் சுவாச மூச்செலாம் வெடிகுண்டு நெடியில் விசமேறிப் போயிருந்தும் – விடுதலைக்கென்றே உயிர்சுமந்துத் திரிகிறோம்: தெருக்கள் நெடுகிலும் உலாவந்த எம் சின்னஞ்சிறு குழந்தைகளெல்லாம் வீழ்ந்த குண்டுகளில் சிதைந்துப் போனாலும் தெருவின் கடைகோடி வீட்டின் – ஒற்றை உயிருக்காய் விடுதலை கோரி நிற்கிறோம்; பசுமை குன்றியிரா எம் தேச நிலங்களிலெல்லாம் – கன்னி வெடிகளே புதைந்திருந்தாலும் எடுத்து … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 75

என்னோடில்லாத கணங்களில் – மரணம் வந்தென்னை பாதி மென்று விடுகையில், தடுத்துக் காப்பாற்றி விடுகிறது; நீ – எப்பொழுதேனும் அனுப்பும் கடிதம்!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 74

உனை விட்டுப் பிரிந்து வருடம் ஒன்றை கடந்த பின்பும் – இன்று என் சட்டையை கழற்றினாலும் அங்கங்கு சற்று – முகர்ந்துக் கொள்வேன்; எங்கேனும் உன் வாசம் மிச்சமிருந்து விடாதா!!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக