Author Archives: வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!

3) வெறும்பய பெத்தவளே..

புத்தகத்தில் குட்டிப்போடும் மயிலிறகு தந்தவளே.., ஒரு பருக்கை மீறாம உண்ணச் சோறு போட்டவளே.., பத்தோ அஞ்சோ சேமிச்சு பலகாரம் செஞ்சவளே, பழையப் புடவை தொட்டில்கட்டி வானமெட்ட சொன்னவளே.. மழைப்பேஞ்சி நனையாம எனைமறைச்சி நின்னவளே.., எங்கிருக்க சொல்லேண்டி வெறும்பயலப் பெத்தவளே..? நீ அடிச்ச அடி திட்டினத் திட்டு எல்லாமே அன்று வலிச்சதடி, இன்று அடிப்பியான்னு அழுது நிக்கிறேன் … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

2) பாவம் பொடிபட மனிதம் புரிபடும்!!

ஓடும் எறும்பு நசுங்கிப்போகும் தின்ற மீனின் உடம்புநோகும் வெட்டும் சதையில் பாவம் வடியும் அது வாழ்வெங்கும் கூட வரும்; பார்க்கச் சிரிக்கும் பெண்ணும் பாரம் சிரிக்க ஏங்கும் ஆணும் பாரம் உறவு புரியா மனதிற்குள்ளே ஆயிரம் பூதம் கனமே சேரும்; திட்ட கூட மனசு சாகும் வார்த்தை அடியில் இதயம் கிழியும் மனித எண்ண ஓட்டையில் … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

1) சிவந்துவடியும் பச்சைரத்தம்..

உயிருறுக்கும் நாளமெங்கும் உயிராகும் பச்சைரத்தம், உள்நாக்கு பயத்தி லிழுக்க – உடல் கொதிக்கும் பச்சைரத்தம்; உடல்தாண்டி வெளிதேடி – காற்றில் உறையும் பச்சைரத்தம், கண்டுகண்டு நாள்முழுதும் உயிரருக்கும் பச்சைரத்தம்; மீனறுத்த வாசனையை – உள்ளே முள்போல் தைக்கும் பச்சைரத்தம், ஆடறுத்துப் போனதலையை – கெஞ்சி என்னுள் கேட்கிறது பச்சைரத்தம்; பெற்றத் தாய் மடிவழிய – என்மேனி … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்..(3)

(குவைத்-3-மரணம்) கோடி கோடி பணமிருந்தாலும் கூரையுரசி மேகம் நடந்தாலும் காலை வாறும் காலன் வந்து வா என்றழைக்கையில் போவென்று மறுக்கமுடியா மனித இனம் நாம். பிறகெந்த நம்பிக்கையை தோளில் சுமந்துகொண்டு விமானமேறினோமோ நாங்களெல்லாம்(?) தெரியவில்லை. மரணம் நெருங்கிவிட்ட சிலருக்குத் தான் மரணித்தல் பற்றியதொரு உயிர்பயத்தையும் நன்கறிய முடிகிறது. அதிலும் தான் இறப்பதைக்காட்டிலும் வேதனை உடனிருப்பவர் இறந்துவிடுவது. … Continue reading

Posted in வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. | பின்னூட்டமொன்றை இடுக

வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (குவைத்-2)

தனிமை தின்றதன் மிச்சங்கள் நாங்களென்று எங்களை நாங்களே சொல்லிக்கொள்வது சற்று வேடிக்கையாகத் தானிருக்கும். ஆனால் உண்மையில் தனிமைநெருப்பு தகித்து வெறும் தொலைகாட்சி கைகாட்டும் பக்கமெலாம் எங்களை நாங்கள் திருப்பிக்கொண்டதற்கு ஏக்கத்தில் வெடித்துப்போகாத எங்களின் இதயங்களும் காரணமென்றால் யாருக்கு அதை நம்பப்பிடிக்கும்(?). திசை ஏதோ சென்று, முகம் அறியா அறையில் நான்கு பேரோடோ எட்டுப் பேரோடோ ஒன்றன்மீது … Continue reading

Posted in வாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. | பின்னூட்டமொன்றை இடுக