Category Archives: அம்மாயெனும் தூரிகையே..

ஊரெல்லாம் கவிதை தேடி அலைகையில், வீடெல்லாம் கிடைத்த கவிதை ‘வீட்டுப் பாடம்’, என்னை சுற்றியிருப்பவர்கள் தந்ததும்; நான் பார்த்து வெந்ததுமான தலைப்புகளால் முடியப் பட்டதிந்த தொகுப்பு.

கவிதை எழுதுகையில், வீட்டு பாடம் எழுதுகிறான் பார், முடித்து விட்டு வருவான் சற்று பொரு என்று யாரோ ‘கவிதைகளில் நேரத்தை போக்குவதாய் எண்ணி’ சொல்கையில், ஆம்; இது என் வீட்டிற்குரிய பாடமும் தான் என்று ஏற்றுக் கொண்ட தலைப்பிது ‘வீட்டுப் பாடம்’

தொலைபேசி

நிறைய இதயங்கள் இங்கு தான் உறைகின்றன; உலகின் தூரங்களை ஒரு சின்ன பொத்தான்களில் சுருக்கிவிடுகிறது தொலைபேசி! காதல் பேசியும் அரசியல் தகவலறிவித்தும் குடும்ப விவாதம் பகிர்ந்தும் வீட்டின் ஐந்தாம் சுவராய் அவசியப்பட்டுப் போனது தொலைபேசி! கால வேகத்திற்கு கையில் அடங்கி போயி; உலக விஸ்த்தாரிப்பை ஒரு சொடுக்கலில் அறிவித்து; மொபைல் ஃபோனாகவும் பிறந்தாலும் அலைபேசியென அர்த்தம் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்

அப்பா என்றொரு வேதம்

அந்த கிழவனின் கண்களில் ஊடுருவித் தான் பிறக்கிறது – என் பார்வையும் பயணமும்! அவனின் இதயம் வழியாகத் தான் பேச ஆரம்பித்தன – என் நாடிகளும் நரம்புகளும்! அவன் உணர்வுகளிலிருந்து தெளிந்து வந்து தான் சுயேட்சைப் பெற்றது – என் மனசாட்சியும் லட்சியங்களும்! அவன் கொள்கையின் அழுத்தத்திலிருந்து தான் வளர்ந்தது – என் வீரமும் விவேகமும்! … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | 1 பின்னூட்டம்

காற்று நிலம் நீர் வானம்; அனைவருக்குள்ளும் அடக்கம்!

ஊரெல்லாம் மனிதர்களுண்டு உனக்கோ எனக்கோ ஒன்றென்றால் மனிதரில் அத்தனை மனிதமில்லையே; நிலம் செடி கொடி மரம் எல்லாம் பல்கி பெருகியதுண்டு எல்லோரின் தேவைக்கும் எல்லாம் கிடைப்பதில்லையே; காற்று நீர் வானம் பரந்து விரிந்து கிடக்க ‘தன்’ சுவாசமும் பார்வையும் பருகலுமாய் தானே நம் வாழ்க்கை??? தீயதை எட்டிப் பிடித்துக் கொள்ளும் இதயம் – நல்லதை விலகி … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | 2 பின்னூட்டங்கள்

நட்பின் பரிணாமம் உறவெனக் கொள்க

சிறகில்லாத பறவையாய் நாட்கள் உறவுகளின் தூர கால – இடைவெளியில் சிக்கித் தான் போகின்றன; கொட்டும் பனிச் சாரலாய் சிந்தும் வியர்வை ரத்தத்தின் – வாசம் நுகராத வீதிகளில் உறவென்னும் ஒற்றை சொல் சிறகு முளைத்துப் பறந்த வேகம் மரணத்தில் முட்டும் போதே – உயிர் வரை வலிக்கிறது; உறவு! வருவதும் போவதும் தான் அர்த்தமெனில் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | பின்னூட்டமொன்றை இடுக

மனிதம் பிறப்பிப்போம்!

உனக்கும் எனக்குமான நிகழ்வுகளில் பாசமும் போட்டியும் எப்படியோ நிகழ்ந்தே விடுகிறது; யாரேனும் ஒருவர் தோற்பதை ஒருவர் எப்படி வெற்றியென மெச்சிக் கொண்டோமோ? அந்த மெச்சுதலில் தான் தோன்றி போயின எத்தனை கோடுகள் – நாடென்றும் இனமென்றும் மதமென்றும் ஜாதியென்றும் – மொத்தமாய் மனிதத்தை கொன்றுவிட்டு! எங்கோ போகிறது நம் வாழ்க்கை கல்கி பிறப்பார் கடவுள் வருவார் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | 6 பின்னூட்டங்கள்