Category Archives: உடைந்த கடவுள்

கடவுளை ஏற்பதற்கும் மறுப்பதற்குமான நியாயமான காரணங்களே; இங்கே உடைந்த கடவுள்களாய்…

2 உடைந்த கடவுள்!!

என்றோ பல ஆண்டுகளாய் பூமியில் புதைந்து கிடக்கிறது தங்கம்; தோண்டி எடுத்தவன் தானே செய்ததாக சொன்னான், செம்மொழி! ———————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

1 உடைந்த கடவுள்!!

பசையோடு கையும் தேய போஸ்டர் ஒட்டிய எந்த பாட்டாளியையும் எந்த தலைவனுமே திரும்பிப் பார்ப்பதில்லை; பாட்டளிகளின் சாமியறையில் மட்டும் எப்படியோ மாலையும் பொட்டுமாய் நிறைய பேர் வெட்டியாக!! ——————————————–

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

160 யாரை காக்க; யாரை கொல்வதோ பராபரமே!!

வெள்ளிப்பூக்கள் தங்கப் பலகை வைடூரிய கொண்டாட்டங்கள் மின்னுகின்றன தமிழர் பலர்  ஆங்காங்கே – வீழ்ந்த – சுவடுகளின் மீதேறி; ———————————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

159 யாரை காக்க; யாரை கொல்வதோ பராபரமே!!

குடி அறுந்தாலும் குடிக்கலாம்,   கொடி பறந்தாலும் குடிக்கலாம்,   எவர் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் – குடிக்கலாம்,   காரி முகத்தில் உமிழ்ந்தாலும் குடிக்கலாம்,   ஏதேனும் – ஒற்றை காரணம் சொல்லிக் குடிக்கலாம்,   மானம் காற்றில் பறந்து கூத்தாடிப்போகும் வரை குடிக்கலாம் –  டாஸ்மாக்கிற்கா பஞ்சம்?? ———————————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

158 யாரை காக்க; யாரை கொல்வதோ பராபரமே!!

இழிவு நிலை எச்சில் குடிக்கிறது,   எவன் சொன்னதும் சொல்லாததும் கூட வலிக்கிறது,   வந்தவர் போனவர் வாரி தூற்றுகிறார்,   நன்றி மறந்தும் நிறையவே பேசுகிறார் –   தட்டிக் கேட்டால் தவறென்கிறார்,   விட்டுப் பார்த்தால் பிரித்தே பேசுகிறார்,   எப்படியோ முடிவில் தன்னையும் தமிழரென்கிறார் ! ———————————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக