Category Archives: ஞானமடா நீயெனக்கு

ஒரு குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையே எண்ண தவிப்பு இருந்து விடும் அன்பை தவிர? அந்த அன்பினை எழுத்தால் சுருக்கி, அதற்கு ஞானமடா நீயெனக்கென புத்தகம் சார் முகமாக பெயரிட்டுள்ளேன்.. படித்துவிட்டு பேசுங்கள். மிச்ச்ள்ளமுதை மீண்டும் மறு பதிப்பாக்குவோம்!!

ஞானமடா நீயெனக்கு – 14

அன்பும் கண்டிப்பும் குழந்தைக்கு – ஒருசேர வேண்டுமென அவ்வபொழுதுனை கண்டிக்கிறேன், நீயோ .. ஒரு – சின்ன அதட்டலில் மிரண்டு போகிறாய், அடித்து விடுவேனோ என பயந்து ஒடுங்குகிறாய், உனக்கான என் கோபம் உனக்காகத் தான் என்றாலும் அதத்தனைக்காகவும் எனை மன்னிப்பாயா???

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 13

தியானம் செய்கையில் மடிமீது வந்து அமர்ந்து கொள்கிறாய், சாமி கும்பிடுகையில் நானுனை – தூக்கிக் கொள்கிறேன். இடையே – நீ என் மூக்கை பிடித்து விளையாடுவாய்.. காதை நோண்டி சிரிப்பாய்.. கைதட்டி என் காதோரம் கத்துவாய்.. எனக்கு – உள்ளே நான் வணங்கும் கடவுள் வெளியே – என்னோடிருப்பதாய் இருக்கும்!

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 12

இப்பொழுதெல்லாம் நீ நன்றாகவே நடக்கிறாய், இருந்தும் – சந்தைக்கு செல்கையில் வீடு வருகையில் வெளியே செல்கையில் உனை தூக்கிக்கொண்டே நடக்கிறேன், நீ கனத்தாலும் உனை சுமப்பதில் எனக்கொரு ஆசை; சொர்கத்தை சுமப்பது இப்படித் தான் – சுகம் போல்!

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 11

எச்சில் – ஒழுக ஒழுக எனைக் குடிக்கிறாய், உடம்பெல்லாம் ஏறி மிதித்து கன்னம் கீறி மூக்கை கடித்து தலைமுடி பிடித்திழுத்து உதட்டை கிள்ளி அப்பப்பா… உனை என்ன செய்கிறேன் பாரென்று வந்த கோபத்தை – ஒரேயொரு முத்தத்தில் ஒத்திஎடுக்கிறாய். நான் கொஞ்சம் சிரிக்கையில் மீண்டும் – நீ கிள்ளி கீறி எனை ஏறி மிதிக்க நீள்கிறது … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | 4 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு – 10

எல்லாமே – களைந்து கிடக்கும் வீடு, மடித்து வைத்திடாத துணிகள், இங்குமங்குமாய் சிதறிய தின்பண்டம், வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு – தெரியுமாத் தெரியவில்லை இது – நீயிருக்கும் வீடென்று!

Posted in ஞானமடா நீயெனக்கு | 2 பின்னூட்டங்கள்