Category Archives: ஞானமடா நீயெனக்கு

ஒரு குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையே எண்ண தவிப்பு இருந்து விடும் அன்பை தவிர? அந்த அன்பினை எழுத்தால் சுருக்கி, அதற்கு ஞானமடா நீயெனக்கென புத்தகம் சார் முகமாக பெயரிட்டுள்ளேன்.. படித்துவிட்டு பேசுங்கள். மிச்ச்ள்ளமுதை மீண்டும் மறு பதிப்பாக்குவோம்!!

ஞானமடா நீயெனக்கு – 4

நீ தூங்கும் போது பாடும் – தாலாட்டில் எந்த ராகமும் இல்லை; நான் – அம்மா என்பதை தவிர!

Posted in ஞானமடா நீயெனக்கு | 1 பின்னூட்டம்

ஞானமடா நீயெனக்கு – 3

நீ – என் செல்லமா அப்பா செல்லமா எல்லோரும் கேட்கிறார்கள்; நாங்கள் தான் உன் செல்லமென அவர்களுக்கெப்படித் தெரியும்!

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 2

நீ என் மடி மீது படுத்து பால் குடித்துக் கொண்டிருக்கிறாய்; நானுன் – மடியில் பிறக்கும் வரம் கேட்டு மீள்கிறேன்!

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 1

நீ சிரிக்கிறாயென நான் செய்ததையெல்லாம் வேறெந்த – பைத்தியக் காரனும் செய்திருக்கமாட்டான்; நிறைய – அப்பாக்கள் செய்திருக்கலாம்!

Posted in ஞானமடா நீயெனக்கு | 5 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு – 40

நான் ஒவ்வொரு பொருளையாக அடுக்கி வைத்துக் கொண்டே வருகிறேன்; என் குழந்தை ஒவ்வொன்றாக எடுத்து கீழே வீசிக் கொண்டே வருகிறது. என் குழந்தையின் யதார்த்தம் மீண்டும் அவைகளை நான் எடுத்து அடுக்கி வைத்ததில் களைந்து தான் போனது!!

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக