Category Archives: ஞானமடா நீயெனக்கு

ஒரு குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையே எண்ண தவிப்பு இருந்து விடும் அன்பை தவிர? அந்த அன்பினை எழுத்தால் சுருக்கி, அதற்கு ஞானமடா நீயெனக்கென புத்தகம் சார் முகமாக பெயரிட்டுள்ளேன்.. படித்துவிட்டு பேசுங்கள். மிச்ச்ள்ளமுதை மீண்டும் மறு பதிப்பாக்குவோம்!!

ஞானமடா நீயெனக்கு – 31

கதவோரம் – ஒளிந்துக் கொண்டு பார்ப்பாய், ஓடி வந்து – கட்டிப் பிடித்துக் கொஞ்சுவாய், உயிர் மென்று குடித்துவிடுவதாய் எனை தேடிக் கதறுவாய் – இதெல்லாம் உனக்கு நினைவற்று போகும் நாளில் நானென்ன ஆவேனோ!!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 30

எனையும் அம்மா அம்மா என்று தான் அழைப்பாய், பார்ப்பவர்கள் – எங்கனா அப்பான்னு வருதாப் பாரென்பார்கள்; நானும் – உனக்கு அம்மாப் போலென்று நான் – அதை கூட ரசிப்பேன்!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 29

உன் சின்ன சின்ன பற்களும் – அலைந்து ஆடும் கண்களும் – எச்சில் ஒழுகும் சிரிப்பும்- எனக்கு முத்தமிட்டு கைதட்டி சிரிக்கும் உன் ஜாலமும் – இத்தனை அழகென்று உனக்கு எப்படி பதிந்து வைப்பேன்!!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 28

என் துணிகளெல்லாம் பழசானால் – கரிகந்தை என்பதில் யாருக்குமே சந்தேகம் இராது; ஆனால் – உன் துணிகள் உனக்கு சிறுத்து விட்டாலும் அதை கையில் தூக்கி நிறுத்திப் பார்த்தால் என்றைக்குமே நீ அதில் – தெரிவாயடா!!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 27

நீ பிறந்த தேதி உனக்கு பெயர் வைத்து உன்னை முதன் முதலாய் அழைத்த நாள், நீ முழுச் சட்டை போட்டது காலூன்றி நடந்தது சப்தம் எழுப்பி பார்த்தது அம்மா என்று அழைத்தது அப்பா என்று அழைத்த குரல் உயிர் வரை உள்சென்றது – இன்னும் எத்தனை எத்தனை எத்தனை??? அத்தனையும் – உனக்கான இடத்தில் பத்திரமாக … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக