Category Archives: கவிதைகள்

ஞானமடா நீயெனக்கு – 22

முத்தம் கொடு என்றால் உதட்டை கன்னத்தை பிடித்துக் கடிக்கவோ – எச்சிலொழுக பார்த்து சிரிக்கவோ மட்டுமே தெரியுமுனக்கு; அதை தாண்டி முத்தமென்றால் இப்படியென சொல்லாமலேயே – வரிசையில் நிற்கிறோம் நானும் – உன் அம்மாவும் உன் எச்சிலில் நனைந்த அந்த -முத்தத்தின் அன்பிற்காய்!

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 21

காலையிலெழுந்ததும் கடவுளை பார்ப்பது நல்லதென்பதில் எத்தனை உண்மை உள்ளதோ; உன்னை பார்ப்பதில் எத்தனை எத்தனை பரவசமுள்ளதடா…

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 20

படுக்கையில் – தலையணை, மெத்தை போர்வைக்குப் பின்னும் உன் புதிய வருகையால் ஏற்பட்ட சின்ன இடைவெளியை, இருவரையும் சேர்த்து நீ அனைத்துக் கொண்ட இறுக்கத்தில் – நீயாகவே; தீர்த்துக் கொண்டாய்!

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 19

பை நிறைய சுமந்த உன் – புத்தகமாகத் தான் முழுதும் படிக்கமுடியாமலே கனக்கிறாய் எனக்குள்ளும் நீ!

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 18

வேலைக்கிடையிலும் உனை நினைக்கும் பொழுதிலும் நீ என்னோடில்லாத – இடைவெளிக்குள்ளும் கேட்டுக் கொண்டு தானிருக்கிறது; நீ – அப்பா அப்பா என்றழைக்கும் அந்த இனிய குரல்!

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக