Category Archives: கவிதைகள்

என் சமூகம், என் வீடு, என் மக்கள் சொந்தமான, சார்பான உணர்வுகளுக்கு உலகின் பார்வையை கருதி நானும் இட்டுக் கொண்ட பெயர் கவிதை!

பிரிவுக்குப் பின் – 54

நினைவின் பயணங்கள் தான் எங்கெங்கோ.. அதில் நீளும் பயணமாய் நீயும் உன் பிரிவுகளும்; வெறும் – பயணமாக மட்டுமின்றி உயிரின் இயக்கியாய்.. சிரிப்பின் அர்த்தங்களாய்.. வாழ்வின் அவசியமாய்.. வாழும் அர்த்தங்களுக்கு – அவ்வப்போது சுகமும் பிரிவின் வலியையும் கற்பிப்பவளாய் நீ.. நீ.. நீ மட்டுமே!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 53

நீயில்லாத வருத்தத்தில் வாழ்க்கை நகர- உன் பிரிவின் துயரம் வானமும் பூமியுமாய் – நீண்டு விரிகிறது!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

காதலின் மறக்காத பொழுதுகள் – 51

இந்தா – உனக்கான ஒரு சொட்டுக் கண்ணீர் பரிசு. எதுவுமே எழுதிடாத வெள்ளை தாளில் நம் அத்தனை நினைவுகளையும் ஒரு சொட்டுக் கண்ணீரால் நனைத்து அனுப்புகிறேன். வாசலில் காத்திருந்து வந்ததும் சிரிப்பில் வரவேற்று சாப்பிட்டாயா என்பதை சைகையில் விசாரித்து பேசினால் மேல் மாடியில் கேட்டு விடுமோயென இதயம் துடிக்கும் சப்தங்களோடு கட்டியனைத்திருந்த நாட்களை எல்லாம் ஒரு … Continue reading →

Posted in காதல் கவிதைகள் | 8 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 52

நான் – வெளிநாடு வந்து சில வருடங்கள் ஆகிறது இம்முறை – திருமணக் கனவோடு ஊர் செல்கிறேன்.. ஊரில் எனக்கென்று முன்னதாகனவே பெண் பார்த்து வைக்கப் பட்டுள்ளது. முதன் முதலாய்.. நானும் அவளும் சந்திக்கிறோம் இன்றெனக்கு நிச்சயதார்த்தம். அடுத்த சில தினங்களில் திருமணமும் முடிய.. காதல் பறவைகளை போல் வாழ்வைத் துவங்கினோம். வாழ்க்கை சில தினங்கள் … Continue reading →

Posted in பிரிவுக்குப் பின்! | 4 பின்னூட்டங்கள்

பசியை ரசித்திரு.. (25)

எங்கோ ஒரு ஜீவன் ஒவ்வொரு பசி வேளையின் போதும் திருடவோ – ஏமாற்றவோ – பொய்சொல்லவோ – அல்லது இறக்கவேணும் தன்னை தயார் படுத்திக் கொண்டுதான் பசி தாங்கி அலைகிறது, புறம் நான்கும் பணம் இருந்தென்ன, உடுத்தும் ஆடைக்குபதில் கடை விற்றென்ன, கோடிகளை கொட்டி அடுக்கி வைத்தென்ன – ஒருவேளை பசியை – ரசித்ததுண்டா பணம் … Continue reading →

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 2 பின்னூட்டங்கள்