Category Archives: கவிதைகள்

உடைந்த கடவுள் – 12

ஒரு ‘கிலோ’ கத்தரிக்காய் இரண்டு ரூபாய்; இரண்டு ‘கிலோ’ உப்பு ஒரு ரூபாய்; ஒரு ‘கிலோ’ பருப்பு பத்து ரூபாய்; பத்து ‘கிலோ’ அரிசி நானூறு ரூபாய் – என்று கணக்கெழுதும் அண்ணாச்சிக்கும் வாங்குவோருக்கும் – ‘கிலோ’ தமிழ் என்றே தெரியப் பட்டுள்ளது! ————————————————————-

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

35 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்!

எழுத எழுத இசையானாய்.. எழுதாமலே கவியானாய்.. உயிரென்று சொல்லி உறவானாய்.. உறவில் – காதல் நட்பு தாண்டி ஏதேனும் ஒன்று புனிதாமாகுமெனில் – அதுவாக கரைவோம் வா!! ——————————————————-

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

34 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்!

என் மொத்த உணர்வின் வெப்பத்தில் – மொழியை பூத்தவளே.. வா.. உன் தனிமையை விரட்டி தாகமொழிப்போம், சுடும் நெருப்பில் ஊற்றிய நீர் போல ஒரு சின்ன சிரிப்பில் கலப்பில் – புன்னகையாய் மலர்வோம் வா.. ————————————-

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

33 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்!

உறக்கத்தை துளைத்தேனடி உண்பதும் மறந்தேனடி பித்தனாய் அலைந்தேனடி – உனை நினைப்பதொன்றையே ரசித்தேனடி; உன் நினைவுகளின் ஈரத்தில் இதயம் நனைந்தேனடி உன் இமையின் அசைவில் தொலைந்தேனடி; உன் உடம்பின் வளைவுகளில் வீழ்ந்தேனடி பின் ஒரேயொரு புன்னகையில் உயிர்த்தேனடி; வார்த்தைகளில் காதலை வடித்தேனடி காதலை சொல்ல கூட கவிதையாக மட்டுமே கறைந்தேனடி! ——————————

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

32 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்!

உனக்காக காத்திருந்த தருணங்கள் எனை கொண்று போட்ட கவலையில் கடந்து – விடைகொள்கின்றன; உனை மனதில் சுமக்கும் கனம் கூட சுடும் தீயென தவிக்கையில் – காத்திருப்பு ஒரு சுடும் நெருப்படி பெண்ணே. கீறி அறுத்து இதயத்தில் இருக்கும் உன் முகம் காட்ட துடிக்கின்றேன், வார்த்தைகளால் உடைத்தாவது உன் நினைவுகளை- கவிதைகளால் வடிக்கின்றேன், யாரிடமும் சொல்லாமல்கூட … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக