Category Archives: கவிதைகள்

என் சமூகம், என் வீடு, என் மக்கள் சொந்தமான, சார்பான உணர்வுகளுக்கு உலகின் பார்வையை கருதி நானும் இட்டுக் கொண்ட பெயர் கவிதை!

16 குறுந்தகவலில் காதல் சொன்னாய்..

ஓடும் பேருந்தில் முன்னே நீ நிற்கிறாய் பின்னே நான் உனையே பார்த்துக் கொண்டு நிற்கிறேன் யாரோ என்னை பொருக்கி என்று சொல்வதும் உனக்குக் கேட்டிருக்கலாம் இருந்தும் நீ திரும்பிப் பார்க்காமலே தலைகுனிந்துக் கொண்டதில் தோற்றுத் தான் போனது நம் காதல்! —————————————————————

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

15 குறுந்தகவலில் காதல் சொன்னாய்..

விடைபெற இயலா தருணங்களில்; நினைவுகளை நம்மோடு அழைத்துக் கொள்வோம்; நினைவுகளிலாவது நாம் காதலராய் – செர்ந்தேயிருப்போம்! ———————————————–

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

14 குறுந்தகவலில் காதல் சொன்னாய்..

உன் வாசத்தில் ஒரு சொட்டு உன் தாவணிப் பூவிலிருந்து விழுகிறது – அள்ளிப் பருகும் காற்றிடம் கோபம் கொண்டு – உன் தாவணியை பிடித்தேன் நான் எனை முறைக்க வில்லை நீ சிரிக்கவில்லை பார்க்கிறாய் பார்க்கிறாய் அப்படி பார்க்கிறாய் உன் தாவணி எடுத்து இரு கை நிறைத்து உயிர்வரை நுகர்கிறேன் நான் உன் வாசம் என்னுள்ளே … Continue reading →

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

13 குறுந்தகவலில் காதல் சொன்னாய்..

உன் கைகடிகாரப் பட்டையின் உள்ளே சொருகி வைத்திருந்த புகைவண்டியின் அனுமதி சீட்டு கீழே விழுந்து விடுகிறது. நீ எடுக்காமலே புகைவண்டியிலிருந்து இறங்கிப் போகிறாய். நான் தவற விட்டு விட்டாயோ எப்படியேனும் – எடுத்துக் கொடுப்பது போல் உன்னை அருகில் வந்து பார்த்து விடலாமென எடுத்துக் கொண்டு ஓடி வருகிறேன். நான் அருகில் வந்ததும் நீ சிரித்துவிட்டு … Continue reading →

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

11 உடைந்த கடவுள்..

உலகம் சுற்றி நடக்கும் கொடுமைகளால் ஒன்றிரண்டாய் தென்படுகிறது மனிதத்தின் தலை தென்படாத மனிதத்திற்கிடையே உடைகிறது கடவுள்! இருநூறு ஆண்டுகளுக்கு மேல் அடிமை பட்டு கிடந்த மண்ணில் புதைந்த உயிர்களின் மறந்த வலியால் – ஈழத்தில் நடந்த கொலைகளில் – உடைந்தது கடவுள்! தெருவெல்லாம் பிச்சையெடுத்து வழி நெடுகும் இரைந்த வறுமைக்கு வழி தேடாத அரசின் மெத்தனத்தில் … Continue reading →

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்