Category Archives: கவிதைகள்

என் சமூகம், என் வீடு, என் மக்கள் சொந்தமான, சார்பான உணர்வுகளுக்கு உலகின் பார்வையை கருதி நானும் இட்டுக் கொண்ட பெயர் கவிதை!

60 வெறும் கதைகேட்ட இனமே…

உள்ளே மின்னலாய் வெட்டி உள்புகுந்து – உயிர்தின்கிறது முள்ளிவைக்காளின் ஓலம்; மறக்கமுடியாத அந்நாட்களின் இழப்பில் புதையுண்ட எம் விடுதலையின் வேகத்தை மீட்டெடுத்துவிடும் துணிவில் தான் இரவு பகல் கடக்கின்றோம்; அம்மா என்றழைக்கும் பிள்ளைகளின் குரல் தாண்டி – அம்மா……….யென அலறிய அலறலில் ஒன்று கூட உலகத்தாரின் மனம் துளைக்காத குற்றத்தால் தான் – இன்று அனாதையாய் … Continue reading →

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கண்பட்ட இடமெலாம் கவிதை; கவிதை!!

சிறகின்றி பறக்கும் துள்ளலின்றி நகரும் மேகங்களுக்குள் ஒளிந்து அழகுற்ற வான மதப்பில்.. நீண்டு வளைகிறது – வண்ணம் நிறைந்ததொரு ஓவியம், தூரல் மழையின் சிலிர்ப்பில் காது மடல்கள் அசைவுற – சிதறும் மழைத்துளிகளின் ஓசை இயற்கையின் ஜாலமாய் உள்புகுகிறது இசை, பசுமையை அள்ளிப் பருகும் மரங்களின் அசைவுகளில் – காற்று விளையாடி யுள்ளே – இதமாய் … Continue reading →

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , | 4 பின்னூட்டங்கள்

59 மலர்விழி என்றொரு மறைமொழி!

தீப்பட்ட புண்ணுக்கு எம் – தாய் போட்ட மருந்தேது நீ செய்த சேவையெல்லாம் தாய்- யன்பின்றி வேறேது! ஈழம் காக்க இரவு பகலும் உறக்கம் தொலைத்த தியாகமது எம் உணர்வு புரிந்து பாசம் தந்த வீரமகளின் ஈரமது! கரும்புலிகள் பாசறையில் அன்பு சொறிந்த பாரவையது; சமர் புரியும் போர்முனையில் வெற்றி – முழக்கமிட்ட வீரமது! தாய்தந்தை … Continue reading →

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பல நூற்றாண்டுகளுக்குப் பின்..

ஒரு தேசம் மலர்கிறது… ஜாதி கொடுமைகளில்லை மத வெறியில்லை எந்த பிரிவின் பாகுபாடுமில்லை பொறாமையில்லை கொடும் மரணம் கொலைகள் இல்லை எல்லாம் கடந்து இயற்கையாய் இயல்பாய் விரியும் மலரினை போல் ஒரு தேசம் பொதுநலங்களில் பூத்து சிரிக்க மலர்கிறது; இருப்பவர் இல்லார்க்கும் கொடுக்கும் நேசம், அன்பை இயல்பாய் பொழியும் மனசு, விருப்பத்தை புரிந்து அலசி ஆராய்ந்து … Continue reading →

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

58 ஒரு தமிழனின் கனவு!!

விடுதலையின் வேட்கையில் ஒவ்வொன்றாய் உதிர்கிறது ஈழ உயிர்ப்புகள்; ஆயினும் – வெல்வோமெனும் திடத்தில் தோற்றிடவில்லை ஒரு உலகத் தமிழரும்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக