Category Archives: கவிதைகள்

என் சமூகம், என் வீடு, என் மக்கள் சொந்தமான, சார்பான உணர்வுகளுக்கு உலகின் பார்வையை கருதி நானும் இட்டுக் கொண்ட பெயர் கவிதை!

57 ஒரு தமிழனின் கனவு!!

அண்ணன் தம்பி அம்மா அப்பா பிள்ளை மனைவி யாரையும் இழந்த எம் உறவுகள் – ஈழத்தை இழக்க மட்டும் தயாரில்லை!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

56 ஒரு தமிழனின் கனவு!!

சுவாசத்தில் சுதந்திரம் கேட்டு – வாழ்தலுக்கு ஒரு ஈழம் கேட்டுத் தானே இத்தனை போராட்டமென அறுபது வருடம் தாண்டியும் புரிந்துக் கொள்ள வில்லை உலகம்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

55 ஒரு தமிழனின் கனவு!!

கைவீசி நடந்த அதே தெருவில் – கைகால் முடமாக்கப் பட்டு கிடக்கிறேன் – பரவாயில்லை; எக்காரணம் கொண்டும் எம் விடுதலை உணர்வை முடமாக்கிக் கொள்ளாதீர்கள் உறவுகளே!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

54 ஒரு தமிழனின் கனவு!!

நெல்மணிக்கும் தேயிலைக்கும் விவசாயம் பார்த்த தமிழனமே; வாருங்கள் ஊரெல்லாம் உறைந்துக் கிடக்கும் ரத்தத்தில் – எந்த உயிர் யாருடையதெனப் பார்ப்போம். ஒருவேளை அது – என்னுடையதாய் இருந்தால் மீண்டுமென்னை உயிர்பித்து விடுங்கள் ஈழம் வெல்லும் வரை மட்டும்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

53 ஒரு தமிழனின் கனவு!!

உலக தமிழினங்களே வாருங்கள் – ஒரு வாரம் ஈழத்தில் தங்கி இறந்த போராளிகளின் உடம்பு கறி கிடைக்கும் தின்று – விடுதலை உணர்வை மீட்டுக் கொள்ளுங்கள்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக