Category Archives: கவிதைகள்

146 அதென்ன காத்து கருப்பு பில்லி சூனியம்???

தெரு மூலையில உடைத்த பூசணிக்கா, உண்டியல்ல போட்ட காசு, கோவில்ல நேந்து விட்ட கோழி, ஆடு வெட்டி போட்ட படையல், வருசாவருசம் மிதிக்கும் நெருப்பு, நாக்குலையும் மூக்குலையும் குத்தும் வேல், நாப்பதம்பது நாள் விரதம்………. இன்னும் இன்னும் இன்னும் என்னென்னவோ; இதலாம் வேண்டாம்னு – சாமியே வந்து சொன்னா கூட சாமியையே முட்டாளென்று சொல்லும் புத்திசாலிகள் … Continue reading →

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

31 மனைவிக்கு தெரியாமல் எழுதிய கடிதம்! (பெண்ணியம்)

எப்படி நிகழ்ந்ததோ அது ஆணுக்கு பெண் – அடக்கம் என்னும் சமாச்சாரம், சமபங்கு கொடுப்பதாய் உன்னையும் வேலைக்கனுப்பி உன் திறமைகளை வெளிப்படுத்த எண்ணி பாவம்; அவளும் கஷ்டப் படுவானேன் நிம்மதியாய் வீட்டில் இருக்கட்டுமே என நினைத்த இடத்தில் தான் துரோகம் இழைக்கப் பட்டுவிட்டது போல்; உடல் கூசப் பார்க்கும் கயவர்களுக்கு மத்தியில் மனம் கூசி போவாயோ … Continue reading →

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , , , , | 8 பின்னூட்டங்கள்

மே-18, முள்ளிவாய்க்கால் நினைவுதினக் கவிதைகள் (42)

ஒரு லட்சமாம் இரண்டு லட்சமாம் கணக்கு சொல்கிறது செய்தி முல்லைவாய்க்காலில் இறந்தவர் பற்றி; கணக்கில் வராது இறந்து போன எத்தனயோ உயிர்களுக்கென்ன இன்னொரு பிறப்பையா திருப்பித் தந்துவிடுமிந்த தேசங்கள்???? ஓஹோ; தமிழரை உயிர்கணக்கிலிருந்து தள்ளிவைத்துவிட்டார்கள் போல் சிங்களன் வெல்லும் வரை; பாவிகள்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , | 4 பின்னூட்டங்கள்

மே-18, முள்ளிவாய்க்கால் நினைவுதினக் கவிதைகள் (41)

முட்கள் உடைந்து போன மீனுக்கு வருந்தும் இனம்.. என் – வீர சமருக்கு துணை நிற்காது வருந்தியென்ன பயனென்று சபிக்குமோ நமை – விளக்கேற்றுகையில் – நம் மாவீரர்களின் ஆத்மாக்கள்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மே-18, முள்ளிவாய்க்கால் நினைவுதினக் கவிதைகள் (40)

ஒவ்வொரு உறக்கத்தின் போதும் இமை விட்டு நீங்காத – பிணக்குவியல்களாய் முள்ளிவைக்காலில் முடைந்துப் போன எம் உறவுகளின் அந்த பிரிவு – அந்த நாள் – அந்த கதறல்கள் – அந்த பொழுது – எனக்கு கடைசி நினைவாக இருந்துவிட்டாலென்ன!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக