Category Archives: கவிதைகள்

மே-18, முள்ளிவாய்க்கால் நினைவுதினக் கவிதைகள் (39)

இறந்த என் வீரர்களுக்கும் உறவுகளுக்கும் விளக்கேற்றி விளக்கேற்றி வைக்கிறேன்; கண்ணீர் அனைத்து அனைத்து விடுகிறது. உலகிற்கு எங்களின் இருட்டு மறைக்கப் பட்டு வெளிச்சம் மட்டுமே தெரிகிறது போல்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மே-18, முள்ளிவாய்க்கால் நினைவுதினக் கவிதைகள் (38)

ஒன்று இரண்டு மூன்றேன்று சுட்டிருப்பானோ சிங்களவன்?!! சுடும்போது ஏதேனும் ஒரு குரல்கூடவா அவன் உறவை அவனுக்கு நினைவுருத்தவில்லை; போகட்டும், நம் சமர் – எவனை கொல்வதுமல்ல ஈழம் – வெல்வது மட்டுமெனக் கொள்வோம்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மே-18, முள்ளிவாய்க்கால் நினைவுதினக் கவிதைகள் (37)

தேச ஜாம்பவான்களே வாருங்கள்; முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் ஒரு விளக்கேற்றிச் செல்லுங்கள்; உம்மோடு – மனிதராய் பிறந்ததற்கு ஒரு விளக்காகவேனும் எறிந்துவிட்டுப் போகட்டும் எம் உறவுகள்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மேதினம் விடுமுறைக்கான நாளல்ல தோழர்களே!!

நாளெல்லாம் வெய்யிலில் ஐஸ்வண்டி தள்ளுபவனுக்கோ, தெருவோரம் அமர்ந்து உச்சி பிளந்து ஒரு கத்தை கீரை வாங்கக் கூவி கூவி விற்கும் வயதான தள்ளாத கிழவிக்கோ, பத்துபாத்திரம் தேய்த்து தேய்த்து கையில் ரேகை மறைந்து போன என் குடிசை வீட்டு சகோதரிக்கோ, ஊரெல்லாம் சுற்றி கால் வீங்கிய காய்கறி காரனுக்கோ.. கையெல்லாம் காரத்தால் வெந்துபோன சுண்ணாம்பு அடிப்பவனுக்கோ.. … Continue reading →

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , | 4 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 70

காற்றினை – கிழித்துக் கொண்டு வந்து என்னை தொடும் உன் கண்ணீருக்குத் தெரிவதில்லை; உன் அழுகையில் அதிகம் வலிப்பது என் இதயம் தானென்று!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்