83, சங்கதி சொல்லும் சங்கீதம் காதல்!!

சில இதயம் தின்று உறவுகள் வார்க்கும்
உறவு கடந்தும் இதயம் தேடும் – பிறர்
இதயம் உடைத்தும்; கெடுத்தும்; கொடுத்தும்; பெற்றும்; வாழ்வித்தும்
வெல்லும் காதல். காதல்.

காதல் காலங் காலமாக நம்மை
புதிய பரிமாணங்களுக்கு கொண்டு சென்றும்,
சில இடத்தில் இடறி விட்டும் –
நமக்குள் உணரப் பட்ட ஞானமாக – அறியாமலே தலைதூக்கி –
நன்மை பேசியும் – தீமை இழித்தும் – குறிப்பாக வயதுகளில் தீயிட்டும்
குதூகலம் சேர்த்தும் – நினைவில் நின்றும், நினைவினை கொன்றும்
எதுவாயினும், வாழ்வின் –
மறவா ‘சங்கதி சொல்லும்; சங்கீதமே காதல்!! காதல்!!

ந்த காதல் தெருவில் போகும் ஒரு பெண்ணை
காண்கையில் பூவாய் சென்று விழும்,
பூ கொண்டு வீடு வரும் பெண்ணின்
கண்ணியத்திலும் பூத்துவிடும்,

கடைதெருவில் குச்சி மிட்டாய் விற்கும்
பையனின் வெள்ளை பல்லிலும் இனிப்பாய் ஒட்டிக் கொண்டிருக்கும்,
எண்ணெய் தேய்த்திடாத என் ஏழை சகோதரியின் இதயத்திற்குள்ளும்
மௌனமாய் பூத்திருக்கும்,

ஓடிப் பிடித்து விளையாடும் மைதானத்தில்
பள்ளிச்சீருடையின் சட்டைப் பையில் மணலோடு வந்துவிழும்
விழுந்த புத்தகம் எடுத்துக் கொடுக்கையில்
பார்வையிலும் பற்றிக் கொள்ளும்,

பள்ளியறைகளில், நூலகத்தில், குழாயடியில்
சந்தையில், கோவிலில், வீட்டு வாசலில்; தெருவிலும் பூக்கும்
முகம் பாராத நுண்ணறிவிலும் எப்படியோ –
இதயமாய் ஒட்டிக் கொண்டு வந்துவிடும்!!

முகநூலில் மின்னசலில் இணையத்து வழியேவும்
தரவிறக்கம் ஆகும் –
தந்தி, தொலைபேசி, மடல், புறா விடும் தூது
எல்லாம் கடந்து கணினியிலிருந்து கணிக்கும் இடம் மாறும் காதல்!

அம்மா திட்டினாலும் அப்பா அடித்தாலும்
அண்ணா முறைத்தாலும் கேள்வி கேட்கும்,
காதலன் காதலியே பெரிதென்று வாதாடும்
இல்லையென்று சொன்னால் உயிரும் விடும்;

ஒரேஒருமுறை இருக்கென்று சொல்லிப் பாருங்களேன் –
உலகத்தையே வெல்லும் காதல்!!
—————————————————————–
வித்யாசாகர்

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

41 கனடாவில் நடைபெற்ற முத்தமிழ் விழாவிற்கு எழுதிய கவிதை!!

புது யுகம் படைப்போம்!!

டி மறைந்து வாழ்ந்தது போதும்
ஊர் மறந்து உறங்கியது போதும்
உறவுகளை அறுத்துவிட்டு கதறியது போதும்
பிள்ளைகளின் – சமாதிகளை கூட உடைத்தது போதும்
எம் – பண்பினை மண்ணோடு மண்ணாக தொலைத்தது போதும்;
வாருங்கள் உறவுகளே; புது யுகம் படைப்போம்;
இனியேனும் இழந்ததை நமக்காய் மீட்போம்!

விடுதலை விடுதலை யென்றே
உயிர்விட்ட இனமே..
சுதந்திரக் காற்றினை சுவாசிக்கவே
நாளுக்கொரு போருக்குள் வித்தான மனிதர்களே..
வாருங்கள்; உயிர்கொல்லாது உயிர்வென்று –
நம் இனம் வாழ ஓர் – யுகம் படைப்போம்!

ற்றுமை தீயின் சுவாலையை – நம்
எதிரி நாக்கில் தீண்டி
உயிர்பயம் கொள்ள செய்வோம்;
உயிரோடு விட்டு நம் – விடுதலையை மட்டும் வெல்வோம்!

கற்றை கற்றையாய் குண்டுகளை வீசி
பறித்துக் கொண்ட நம் உடமைகளை
நாம் வாழ்ந்த அடையாளத்தை –
நம் ஒற்றுமையால் மீட்டெடுப்போம்!

மரணத்தின் விளிம்பில் சாய்ந்த
ஒரு இனத்தின் – மிச்ச சுவாசத்தை வார்த்தெடுத்து
புதியதொரு யுகம் படைப்போம் – அதில் தமிழரின்
ஒற்றுமையை  ஓங்க வைப்போம்; வாருங்கள் உறவுகளே…!!!!!!

ல்லில் அடிக்கவில்லை குண்டில் அடித்தார்
தள்ளிப் போகவில்லை எள்ளி – நகைத்தார்
முல்லை பறிக்கவில்லை முற்றும் பறித்தார்
சண்டை ஒழிந்ததென்று – சங்கினை யறுத்தார்,

வாழ்ந்த சுவடுகளை அழித்து – அந்நியரென்றார் –
தூர வந்து தமிழரென்று மார் தட்டினோமே யொழிய
பிறந்த எம் தேசத்தில் ஒரு பிடி மண்ணுக்கே –
விரோதியானோமே???!!!!!!!!!

‘நாம்’ என்ற ஒற்றை குறையினால்
நானென்றே ஒருமை பட்டோமே????????
இனி –  வாருங்கள்  உறவுகளே நாமென்றே இணைவோம் –
ஒற்றுமையின் பலத்தில் தமிழினத்தின்; புது யுகம் படைப்போம்!
————————————————————————————
வித்யாசாகர்

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

GTV – செய்தியில் பகிர்ந்துக் கொண்ட வித்யாசாகரின் விருதுகளைப் பற்றிய காணொளி!!

னக்கான அங்கீகாரத்தை தன் மகிழ்வாகக் கொண்டு  பூரிக்கும், என்னன்பு உறவுகளுக்கும், என் படைப்புக்களை எனைகாட்டிலும் பெரிதாக மதித்து, என் உழைப்பினை தலைமேல் சுமந்து; எனை உலகமெலாம் கொண்டுபோய் சேர்க்கும் GTV  தொலைக்காட்சிக்கும், குறிப்பாக பெரும் அன்பிற்குரிய தோழமை உறவு றேனுகா அவர்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகளும் அன்பு வணக்கமும்!!

வித்யாசாகர்

Posted in அறிவிப்பு, GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

82, வார்த்தைகளற்ற இடம் தேடி; நீயும் நானும் போவோம் வா..

ரு சின்ன முத்தத்தில் இதயம்
ஒட்டிக் கொள்ளவும் –
உதடுகள் ஈரமாகவும் ஒரு பூ உள்ளே பூக்கிறது.

நெருக்கத்தின் நெருப்பில் அன்பு வார்க்கவும்
பண்பின்  நகர்தலில் காதல் கற்கவும் –
ஒரு சப்தம் இசையாய் காற்றிலே கலக்கிறது..

முகத்தின் மாயயை உடலால் உரசி கிழித்து
உள்ளத்து கதவுகளை வாழ்விற்காய் திறந்துவைக்க
உலகதத்துவம் வெற்றிடமாய் உள்ளே பரவுகிறது..

பேசிக் கழிக்காத பொழுதொன்றாய்
ஒவ்வொரு நாளினையும் –  வாழ்ந்துக் காண்பிக்க
காலக் கணக்கின் அச்சாணி புடுங்கி –

ஒரு அசட்டுத் தைரியம் உட்புகுந்து
வருடங்களை எல்லாம் நாட்களாய் மாற்றி
நாட்களை நொடிகளாய் திரித்து – யுகம் பல உன்னுள் தொலைக்க

உனை மட்டுமே தேடி –
யாருமிலா அண்டப் பெருவெளியில்
அலைகிறதென் இமைப் பூட்டாத யிக் கண்களிரண்டும்..

உச்சி நடுக்கோட்டில் முத்தம் பதித்து
பாதபஞ்சுதனில் பூமிபடாதுனை – நெஞ்சுக் கூட்டில் தாங்கிக் நிற்க
நித்தமும் நித்தமும் ஓர் தவம்
காத்திருப்பின் கண்ணீர்பெருக்கில் கரைந்தேப் போகிறதெனில்
நம்புவாயா???

சப்தமிடாத வானத்தின் இரவொன்றில்
நட்சத்திரம் பொருக்கி பெயர்கோர்த்து
அதற்கு வானவில்லில் கோடுகிழித்தா லென்ன யெனும் கற்பனை
உனை எண்ணும் போதெல்லாம் –
உன் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் – உன் நினைவுகளாய் உள்ளே
பெருக்கெடுக்கிறது…

காலத்திற்குமான சாபமாக காதலை திரித்த
பொய்யர்களின் முகத்தில் – எது காதலென எழுதிவிட்டு
ஜாதியின் மதத்தின் வெறியை
ஒரு முத்தத்தில் அழித்துவிட்டு –
வெறுமனே  திரும்பிப் படுத்துக் கொள்ளும்
ஒரு இள-ரத்த துணிவல்ல யிது;

உன்னோடு வாழமட்டுமே –
கனவின்றி காத்திருக்கும் ஒரு வாலிபனின் உணர்வு.

உனக்கும் பிடிக்குமெனில் சொல் –
இரு கைவிரித்து –
இதோ இந்த கனம் முதல் நமதென்று முழங்கி
வார்த்தைகளில்லா ஓரிடம் நோக்கி
நீயும் நானும் பறந்துபோவோம்!!!
————————————————————————————–
வித்யாசாகர்

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

புத்தகத்திற்கும் பூவிற்கும் கல்யாணம்!!

ணமகன்: ராமநாதன்  ரவி தமிழ்வாணன்

ணமகள்: சிந்தாமணி நாராயணன்

நாள்: 07.02.2011

நல்லுள்ளங்களுக்குப் பிறந்த வெள்ளை மனங்களுக்கு வாழ்த்து!!

வெள்ளை வானத்தில் –
வீழாநட்சத்திரங்கள்
இன்று இவர்களை எண்ணி மின்னுமோ..

அடர்ந்த அமைதியில் ஒளிரும் நிலவு
இன்று இரவு மட்டும் தன் கண்களை மூடிக் கொண்டு
இருட்டிற்குள்ளிருந்து இவர்களின் வாழ்வின் வாசல்தனை
வெளிச்சம் நோக்கித் திறக்குமா…

காலையில் உதித்த சூரியன்
தனக்கான தீஞ்சுடர் கைகள்தனை கட்டிக் கொண்டு
உளம்குளிர இவர்கள் –
வையகம் போற்ற வாழட்டுமே யென்று வாழ்த்துமோ..

அல்லது –

வானத்திற்கு கீழே
பூமியில் பூத்த மலர்கள் வாசத்தினை எல்லாம்
இவர்களுக்காய் கொடுத்துவிட்டு –
வாழ்த்துக்களாக மட்டுமேப் பூத்துக் குலுங்குமோ..

அல்லது –

புத்தகங்கள் சேர்ந்து வாழ்த்துமோ..
எழுத்துக்கள் ஒன்று கூடி பூமழையாய் தூவுமோ..
தமிழின் ஆதிவேர் ஒன்று – முன்வந்து
இந்த தமிழ்வாணரின் பேரன்.. பேத்தியை..

லேனா ரவியின் பிள்ளைகளை
உலகத்தின் முன்னிலையில் – நிறுத்தி
பாசத்திற்கு சாட்சி இவர்களெனக் கைகாட்டி
அட்சதைகளை இட்டுப் போகுமோ?!!!!!!!

போகும்;
போகும் போகும்..

உலகப் புரட்சிகள் வெடிப்பது
எழுதுகோல் முனையி லிருந்துமெனில் –
அந்த எழுதுகோலின் தலையெழுத்தினை நிர்ணயித்த
புத்தகங்களின் பிறப்பிற்கு –
பல படைப்பாளிகளின் பிறப்பிற்கு –
காரணமான அத்தனை நன்றியின் உணர்வுகளும்
ஆசியாய் வந்து உங்களை வாழ்த்திப் போகுமென் அன்புள்ளங்களே!!

உலகின் வேர்களில் தனக்கான
அடையாளத்தை பதித்து வைத்த –
அன்பிற்கும் பண்பிற்கும் பாசத்திற்கும்
விலாசம் தந்த பெற்றோர்;

அந்த விலாசத்தில் உயிர் பதித்து வாழும் –
பெரிய தகப்பன் தாய்; உறவுகள்,

நல்ல சுற்றம்; போதுமான கல்வி;
உரித்தான பணியமர்வு; எல்லாம் மிகுந்து

வாழ்வின் வசந்தங்களை கொண்டு வர அன்பு மனைவியும்,
நல்வரங்களாய் பிள்ளைகளும், வெற்றியும், கொண்டாட்டமுமாய்
செல்வங்கள் பதினாறும் பெற்று
எல்லாம் நல்லாசைகளும் நிறைவேறி
வாழ்வின், பிறப்பின் – காரணத்தை வெற்றிகளால் நிரப்பி
நீடு வாழ, பெருவாழ்வு வாழ –
என் மனம் நிறைந்த வாழ்த்துக்களும் இறை வேண்டுதலும் உரித்தாகட்டும்!!
———————————————————————————————————–
வித்யாசாகர்

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்