25, கண்ணீரின் வெப்பம் சுடும் “96” என்னும் அழகிய திரைப்படம்.. (திரைவிமர்சனம்)

96slider500

மனசெல்லாம் மழையில் நனைந்ததைப்போல கண்ணீரில் நனைந்து காதலின் குமுறல்களுள் தவித்துப்போகிறது 96 திரைப்படம் பார்க்கையில். கண்ணாடியில் முகத்தைப் பார்ப்பவர்கள் மனதை அதிகம் பார்ப்பதில்லை, மனதைப் பார்ப்பவர்களால் அந்த நாட்களையும் அத்தனை எளிதில் மறந்துவிட முடிவதில்லை. காதல் என்பவர்களுக்கு காதலை மறுப்பவர்களுக்கும் காதலை எதிர்ப்பவர்களுக்கும் இருப்பது காமம் பற்றிய பயம், காதலிப்பவருக்கு மட்டும் தான் அது காதல். காதல் எனில் அன்பு. அன்பு எனில் நினைவின் படிமங்களை சுமந்துக்கொண்டும் உயிருள்ளவரை வாழ்ந்துவிடக் கூடிய எதிர்பார்ப்பிலா அன்பு. தொட வேண்டியதில்லை. தோளில் தாங்கி கொள்ள அவசியம் இல்லை. வெறுமனே மனதில் சுமந்துக் கொள்ளும் அன்பு அது. அந்த அன்பை உணர்வதற்கு இந்த 96 போன்ற படங்களும், விஜய் சேதுபதி திரிஷா மாதிரியான நடிகர்களும் தேவைப்படுகிறார்கள் என்றெண்ணுகிறது மனசு இப்படத்தைக் கண்டுவந்ததும்.

இப்படத்தில் வரும் ராமகிருஷ்ணன் ஜானகி தேவியை விட நிறைய பேருக்கு, அந்த பத்தாங்கிளாஸ் ஜானுவையும் ராமையும் மறந்தே போகாது. திரயரங்கு முழுதும் எல்லோருக்குமே தெரிந்தது ஜானு ராம் என்பதை விட அவரவரின் மனசாட்சியும் அவரவரது முகங்களும் அந்த பத்தாங்கிளாஸ் நினைவுகளும் தான்என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. படம் முழுக்க மனசெல்லாம் அவளின் நினைவுகளால் கருகி கருகி ஜென்மம் தொலைந்துபோன ஒரு உணர்வோடுதான் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் திரையரங்கில் அமர்ந்திருந்தனர் என்பதை உடன் அமர்ந்திருந்த நம் எல்லோராலும் உணரமுடிந்திருக்கும்.

கொஞ்சம் இடுப்பை குலுக்கும் பாடலோ, மேலே உடம்பு தெரிய அசையும் ஆட்டமோ நெஞ்சில் ஆசையை மூட்டும் வெப்பமோ ஒன்றுமே இல்லாமல் எனது பரிசுத்த அவளை மட்டும் அவளாகவே காட்ட முடிந்தவொரு கண்ணியம் மிக்க திரைப்படம் இது 96. காதல் என்றாலே, இப்படி காட்டுங்கடா, காதலை இவ்வளவு மனசு கூசாமல் பார்க்க வைய்யுங்கடா, காதல் எனில் உள்ளே நெருப்பெனச் சுடுமொரு கற்பு இயல்பில் இருவருக்குமே உண்டென்று அழுத்தமா சொல்லுங்கடா என்பதைப் போல அத்தனை ஒரு வள்ளுவம் பொதிந்த காதலை காட்டிய கதையாசிரியருக்கும் இயக்குனருக்கும் கைகூப்பும் நன்றி.

டைரியில் ரோசாப்பூ, சட்டையில் பழைய இங்கு துளிகள், உள்ளே என்றோ எழுதிய கவிதை என்பதிலிருந்து, கிணற்றுக்குள் கால் போட்டு அமர்வது, இரவும் பகலும் அவளின் ஒற்றை நினைவால் தனிமைக்குள் மௌனத்தால் அழுவது வரை என்னை நானாகவே சற்று திரும்பிப் பார்த்துக் கொண்டதைப்போல் இருந்தது எனக்கு இப்படம் பார்க்கும் நேரம்.

ஒரு காட்சியில், நாயகி, என்னை வந்து பார்க்கவே இல்லையே ராம் என்கிறாள், உடனே அவன், நான் தான் வந்தேனே உன்னை கேட்டேனே, உனக்கு அது தெரியாத என்கிறான். இல்லையே, தெரியாதே, எப்போ வந்தாய் என்றதும், அவன் நடந்ததைச் சொல்கிறான். சொல்லி முடிந்ததும், அவள் ஓடுகிறாள், அறைக்குள் ஓடி கதவை அடைத்துக்கொண்டு உள்ளே சென்று கதறுகிறாள், நாயகன் உள்ளேநுழைந்து அவள்முன்னே நின்று அழாதே என்று கெஞ்சுகிறான். அவள் அவனின் மார்மீது சாய்ந்து மன்னித்துக்கொள் ராம் எனக்கு நீ வந்தது தெரியாது ராம் என்று அழுகிறாள், இருவரும் உருகும் அந்த காட்சி ஒரு அழகிய ஐந்து நட்ச்சத்திர ஓட்டலின் கழிவறைக்குள் நடக்கிறது. நமக்கு மனசெல்லாம் ஒரு பத்திருபது வருடத்திற்கு முன் தானே நகர்ந்துபோய் தனது காதலியையும் காதலனையும் தேடி அலையத்துவங்கியது.

முதலில் அவர்கள், சந்திப்பதும், ஆசிரியை அட்டெண்டன்ஸ் எடுப்பதும், அவள் எழுந்து நின்று ஒவ்வொரு முறியும்ம் பல திரைப் பாடல்களை பாடுவதுமெல்லாம் படத்திற்கு பலம் சேர்ப்பது என்றாலும், அவன் அடிக்கடி கேட்க்கும் யமுனை ஆற்றிலே பாடலை பாடும் நேரம் விஜய் சேதுபதிக்கு என்ன செய்வதென்றே தெரியமுடியாத ஒரு கதைச் சூழலை அமைத்து, விஜய் சேதுபதி இருட்டில் ஓடி விளக்கு தேடி மொத்த பொருட்களையும் கீழே தள்ளி உடைத்து பிறகு கடைசியாய் ஒரு மின் விளக்கை கொண்டு எடுத்துக்கொண்டு வந்து இருட்டில் அவள் பாடுகையில் அவளுடைய முகத்தின் முன் வைக்க சட்டென வெட்டுண்ட மின்விளக்கு எரிகிறது, பாடலை நிறுத்துகிறாள் அவள், மனசு திறக்கிறது.. அவன் மனசும் ஆர்ப்பரிக்கிறது.. நமக்கெல்லாம் அங்கிருந்து அந்தப் பாடலை மீண்டும் பாடவோ ஒருமுறை அவள் பாடி கேட்கவோ தோன்றுகிறது.

ஒரு கலை என்பதன் சிறப்பு இது தான்; சமகாலத்தை தாங்கி நிற்பது, இருப்பதை இருப்பதாக பதிவுசெய்வது, அதன் தன்மையை கெடாமல் படைப்பை உருவாக்குவது போன்றதாகும். அந்த கலையின் இயல்பில் கண்ணியத்தை புகுத்துவதும், மிக அழகிய உணர்வுள்ள மனிதர்களை காண்பித்து அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய அளவிற்கு பல அறிய குணங்களை பண்புகளைக் காண்பிக்க முயல்வதுமே திரைக்கலையின் பொக்கிஷத் தன்மையை கையாண்டதற்கு சான்றாகிறது. அவ்விதத்தில் இந்த 96 திரைப்படம் மிக அழகிய மனசுல மனிதர்களை ஈரம் குறையாமல் காட்டுகிறது.

பல காட்சிகள் இரசனை மிக்கவை, பல மனிதர்களின் சந்திப்பு இப்படத்தின் வரப்பிரசாதம், படத்தில் வந்து செல்லும் ஜனகராஜ், தாடியை மழித்து பள்ளிப்பருவ நாடுகளை தான் பார்த்து வளர்ந்த சின்னப்பையனுக்கு மீண்டும் தர முயலும் பழைய நடிகர் அண்ணன், ராம் மற்றும் ஜானுவின் நண்பர்கள் வளர்ந்துவிட்டதாக காட்டும் பல நடிகர்கள் இப்படத்தில் ஒருசில காட்சிகளில் வந்துசென்றாலும் மனதிற்குள் நீங்காத இடத்தை பிடித்துக் கொள்கின்றனர்.

திரிஷா கடைசி காட்சியில் ராமை விட்டுச் செல்ல இயலாமல், தவிப்பதும், சற்று இரு வந்துவிடுகிறேன் எனச் சென்று அவன் தனக்குமான ஒரு விமான டிக்கெட் வாங்கி வந்து வா உன்னை விமானம் ஏறும் தளத்திற்கு உள்ளேவரை வந்து விட்டுவருகிறேன் என சேதுபதி சொல்லி திருச்சிக்கு ஒரு பயனச் சீட்டையும் எடுத்துக்கொண்டு வருவதும், ஒரு இரவு முழுதும் இருவரும் ஒன்றாகவே இருந்து சற்றும் கசக்காத காதலை வெறும் கண்ணீரில் பொத்தி பொத்தி பாதுகாத்துக்கொண்டு கண்ணித்தின் எடை குறையாமல் இருவரும் விடைகொள்வதும், இறுதி காட்சியில் ஜானு பார்க்கும் கண்களை உயிர் தீர மீண்டும் அவன் பார்க்க, அப்படி பார்க்காதே ராம் என அவனுடைய கண்களின் மீது கைவைத்து அவள் அழுவதுமெல்லாம் உள்ளே ஒரு இடியை இறக்கி நெஞ்சில் ஈட்டிகளால் குத்தும் ரணத்தோடு ஒரு வலி வரவைக்கும் காட்சிகளாகவே அமைகிறது. உண்மையில் அந்த வலியை எத்தனைப் பேர் உணர்ந்தீர்களோ தெரியாது, அத்தனைப் பேருமே தனது காதலை கண்ணீரோடு கரைத்துக்கொண்டும் முந்தானைக்குள்ளும் கைகுட்டைக்குள்ளும் ஒரு சிவந்த கண்களின் பாரத்திற்குள்ளும் மறைத்துக்கொண்டும்தான் வெளியேறினார் என்பதே உண்மை.

ஒரு அழகி எனும் திரைப்படம் வந்தது, அப்போதென்னவோ அதுதான் கடைசி காதல் பற்றிய அரிய திரைப்படம் என்று எண்ணியிருந்தோம். பிறகு ஒரு ஆட்டோகிராப் வந்தது, அப்போது அது தான் காதலின் தீரா வலியின் படம் என்று எண்ணியிருந்தோம், இப்போது 96 வந்திருக்கிறது, இனி இதுவும் கடைசியில்லை, இதைவிடவும் நம்மால் ஒரு நல்ல திரைப்படத்தை தந்துவிட இயலுமெனும் நம்பிக்கையை இந்த 96 திரைப்படம் தருகிறது.

நம்மில் பலர் இப்படித்தான் இருக்கிறோம். எத்தனையோ பேரின் காதல் மனசுக்குள்ளேயே அழுந்த போட்ட கல்போல கனத்தே இருக்கிறியாது. ஒரு காட்சியில், திரிசாவைப் பார்த்து விஜய் சேதுபதி “நீ எப்படி இருக்கிறாய், சந்தோசமாக இருக்கிறாயா என்று கேட்க, திரிஷா மிக அழகாக, தன்னைப்பற்றி சில உடலசைவில் சொல்லிவிட்டு, தனது கணவரைப் பற்றி சொல்லும் பண்பு தான் உச்சம். பிறகு, அதை விடு நீ ஏன் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை. நீ செய்துகொள் ராம், உனக்கும் ஒரு திருமணம் முடிந்து, உனக்கும் குழந்தை பிறந்து, அந்தக் குழந்தையின் கண்கள் வழியே எனக்கு உன்னைப் பார்க்கவேண்டுமென கேட்கும் இடம் மிக அழகு. உண்மை என்னவென்றால், ஒரு காதலியாக அவளை பார்க்கும் அதே கண்களில் அவள் ஒரு மனைவியாகவும் அழகாக தெரிகிறாள். தனது மனைவியும் இப்படித்தான் யாரோ ஒருவரின் அன்பை மனதுள் சுமந்துக்கொண்டு நமக்காகவும் புனிதம் கெடாமல் வாழ்கிறாளோ என எண்ணுகையில் பெண்களின் மீதே ஒரு மதிப்பு ஏற்படுகிறது. தனக்காக, தூங்கி தனக்காக எழுந்து, தனது வீடு தனது பெற்றோர் உற்றோர் என முழுக்க முழுக்க தனக்காகவே வளையவரும் மனைவி எத்தனை உயர்வானவள்? தனது உறவுகளை பிரிந்ததோடு மட்டுமல்லாது, இப்படி தனக்குப் பிடித்த ஒருவனையும் விட்டுப்பிரிந்து முகத்திற்கு நேரே சிரிக்கும் இத்திரைப்படத்தின் நாயகியைப் போன்ற பெண்கள் மனைவிகள் எத்தனையோ பேர் நமக்குள்ளும் இல்லாமலில்லை. அவர்களின் மனசும் கண்ணீரும் தான் இந்த 96 திரைப்படம்.

உன்மையில், என்னால் மனதை சமாதனப் படுத்த முடியவேயில்லை. காலம் முழுக்க கண்ணீரோடும், அந்த கண்ணீரை கூட வெளியில் காட்ட பல சமூக திணிப்பின் அழுத்தத்தோடும் தான் நாம் அத்தனைப் பெரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மீண்டும் மீண்டும் இத்திரைப்படத்தின் காட்சிகளூடே எண்ணுகிறேன். மீண்டும் அவளை பார்க்க ஒரு வாய்ப்பு இருந்தே விடாதா என்று எண்ணி வலிகளோடு மட்டுமே செத்துக்கொண்டிருக்கும் இதயங்களுக்கு இதோ இந்த 96 போன்ற திரைப்படங்கள் தான் ஒரு ஆறுதலை தருகிறது.

என்னைக் கேட்டால், காதலித்தால் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்போருக்கு, காதலித்தால் அது காமம் சேர்ந்தது என்போருக்கு, காதலித்தால் அது தீது என்போருக்குமெல்லாம், இந்த படத்தில் வரும் ராம் சுமக்கிறானே நெஞ்சில் முழுக்க முழுக்க அவளை அவளாக மட்டும், அந்த நினைவையும், அந்த ஜானு தீயாய் எரிய எரிய மனதிற்குள் புதைத்துக்கொண்டாற்போல் அவனை புதைத்துக்கொண்டு அழுகிறாளே, அந்த அழையையும், உடம்பை உதறிவிட்டு மனசிரண்டு ஒட்டிக்கொண்டு ஒரு உலகிற்கு புரியாத சத்தியத்தை சுமந்துகொண்டு உனக்கு நான் எனக்கு நீ என்று தனித்து நிற்கிறதே, அந்த நிற்பின் கம்பீரம் தான் காதலின் மகத்துவமும் என்பேன்.

அத்தகு காதலைக் காட்டிய, அவர்களின் இருவரின் சந்திப்பின் வழியே நம் முகத்தை நமக்கே பார்க்கத்தந்த சிறந்தவொரு இயக்குனருக்கும், நடிகர்களுக்கும், இசையமைப்பாளருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் மற்றும் இதர அனைத்து திரைக் கலைஞர்கள் எல்லோருக்குமே காதல் கனக்கும் அன்பிதயங்களின் வலி தீரா நன்றி.. வணக்கம்!!

வித்யாசாகர்
vidhyasagar1976@gmail.com

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

34, கைப்பேசியும் களவுபோன நாட்களும்..

 

 

 

 

 

 

 

 

 

நாட்களை கைப்பேசிக்குள் தொலைக்குமொரு
ஆபத்தான கனப்பொழுது,
எழுதாத கடிதங்களைப்போல சிந்தாதக் கண்ணீரும்
இரத்தநெடியோடு நிரம்பிக்கிடக்கும்
வலிநிறைந்த மனசெனக்கு,

மருத்துவர்கள் கொலஸ்ட்ரால் சுகர்
பிரஷர் விட்டமின்-டி ஆயா தாத்தா பாட்டி என்றெல்லாம்
மலிவு சொற்களோடும் மயக்க ஊசியினோடும்
திரிந்துக் கொண்டிருக்க, நான் அங்கிருந்து நகர்ந்து
பின்னறையை நோக்கி நடக்கிறேன்,

இரத்த சகதியில்
கசங்கிய மலர்போன்றோரு மகனை
ஊர் பேர் தெரியாத சிலர் தூக்கிவந்து
மருத்துவமனையில் சேர்க்கிறார்கள்,

ஒரு வரலாறு எழுதுமளவு கேள்விகள் பல
கேட்டுமுடிய
பெரிய மருத்துவர் ஒருவர் ஓடிவந்து
இன்சூரன்ஸ் பற்றியும்,
அவன் வேலைப்பார்க்கும் நிறுவனம், சம்பளம்
பற்றியெல்லாமும் கேட்டுக்கொண்டு
அவசர சிகிச்சை அறைக்குள் அவனைக்
கொண்டுசெல்ல ஆணையிடுகிறார்.,

திடுமென அவருடைய கைப்பேசி கத்த
அதை எடுத்துக்கொண்டு
செவிலிப்பெண்ணொருத்தி ஓடிவருகிறாள்..

கைப்பேசியில் அலறிக்கொண்டிருந்த மனைவி
மருத்துவரிடம் என்னங்க நம்ம பையன்
போன்பேசிட்டேப் போய் லாரியில் மோதிட்டானாம்
என்கிறாள்,

மருத்துவருக்கு ஏதோ சட்டையின்
நிறம் பார்த்த நினைவு சடாரென வந்து
கவனத்தில் அறைய
பதறியடித்துக் கொண்டு
அவசரசிகிச்சை அறைக்குள் ஓடுகிறார்..

அவருக்கு
மூடியிருந்த வெள்ளைத்துணியை யகற்றி
யாரென்று முகம் திருப்பிப் பார்ப்பதற்குள்
கை காலெல்லாம் படபடவென நடுங்கிற்று
தடதடவென உடம்பு ஆடியது
மூச்சு முட்டி மயக்கம் வருவது போலிருந்தது

கைப்பேசிக்குள் மனைவி கதறும்
சப்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது..
————————————-
வித்யாசாகர்

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உதவுவுது மனிதர்களின் மகத்துவம் அன்று; மானுடக் கடமை..

PHOTO-2018-09-25-13-30-31

அன்புறவுகளுக்கு ஒரு வேண்டுகோள்,

நம்மால் இயன்ற உதவியை பிறருக்கு செய்ய வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம். ஆங்காங்கே பலர் பல இன்னல்களால் ஏமாற்றத்தால் இயலாமையால் ஏழ்மையால் துன்புற்று வருகின்றனர். அவைகளையெல்லாம் சரிசெய்ய யாரோ ஒருவர் வானத்தில் இருந்து நேரே நமக்கென இறங்கி வர மாட்டார்.

நாம் தான் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து அவரவர் பங்கிற்கு ஏற்றவாறு ஏதேனும் அவரவரால் இயன்ற சிறு சிறு உதவியை பிறரின் நன்மைக்கு வேண்டி செய்து பழகவேண்டும். இன்னலில் இருப்போருக்கு இயன்றதை வழங்கி பொதுமானுடத் தன்மையை, மனிதத்தை வலுப்படுத்தவேண்டும். உண்மையில், உதவுவது என்பது ஒரு தனித்தன்மை அன்று. அது நம் உயிர்நேசச் சான்றாகும்.

பரவலாகப் பார்த்தால் அனைத்துயிர்களும் ஒன்றிற்கொன்று உதவியாகவும் அணுசரணையோடும் தான் வாழ்ந்து வருகிறது. “நாமும் அங்ஙனமிருந்து நமக்குள்ளான இடைவெளியை அகற்றி, எண்ணங்களை மாற்றி, எல்லோரும் எல்லோருக்கும் பாகுபாடற்று உதவிசெய்து மகிழ்வோடும் நிறைவோடும் வாழ்வோம்” எனும் உறுதியை தனக்குள்ளே எல்லோரும் எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு நினைவிருக்கும், முன்பு குவைத்தில் விபத்தினால் ஒரு கால் இழந்த நண்பர் திரு. ஜாபர் அவர்களுக்கும் மற்றும் இங்கே இறந்துபோன வேறு சில அன்பர்களுக்கும் வீட்டு மனை தந்து உதவுவதாய் முன்பு நாம் கூறியிருந்தோம்.

எமது அன்பு சகோதரர் திரு. நெல்லை மரைக்காயர் கூட சென்ற வருடத்தில் அதைப்பற்றி விரிவாக ஒரு பதிவிட்டு நானும் கூட சிலருக்கு அரை மனையளவு இடம் தருவதாக அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார். அதை பலர் பகிர்ந்துகொண்டு நமக்கு நிறைய நன்றியையும் வாழ்த்தையும் கூறியிருந்தனர்.

சென்ற வாரத்தில் அவ்வாறே, முன்பு கூறியவாறே, திரு ஜாபர், திரு. ஜெயசீலன் மற்றும் வேறுசில குடும்பங்களுக்குமென சின்னதாய் அவர்கள் இழந்த நிம்மதியை மீட்டுத்தரும் பொருட்டு தனித்தனியே ஒரு வீட்டுமனையை (1000Sq/Ft) வீதம் விழுப்புரம் பக்கத்தில் அவரவர் பெயருக்கு சட்டரீதியாக பெயர்பதிவு செய்துத் தரப்பட்டுள்ளது.

இறையருளால், மொத்தம்; பத்திற்கும் மேல் மனைகள் பிறருக்கென உதவவேண்டி வாங்கியிருந்தேன். மாதாமாதம் நான் உழைத்து சம்பாதித்த எனது சம்பள பணத்தில் சேமித்துவந்து இப்பேருதவியை செய்திருக்கிறேன். இதுவரை 6 குடும்பங்களுக்கு மட்டும் பதிவுவேலைகள் துவங்கி நான்குப் பேர்களுக்கு நேற்றுவரை மொத்த பதிவும் முடிந்தேபோயிற்று.

உதவுவதற்கு பெரிதாய் கையில் கோடி கோடியாக பணமிருக்க வேண்டிய அவசியமோ, மிட்டா மிராசாக இருக்கவேண்டியதோ எல்லாமில்லை. பிறருடைய வருத்தம் கண்டதும் உதவி செய்வதற்கான வழியை மட்டும் தேடினால் போதும். உதவும் மனசிருந்தால் போதும். உதவக்கூடிய வழிகளும் தானே பிறக்கும்.

PHOTO-2018-09-25-13-30-31(1)இன்னும், இங்கே (குவைத்தில்) இறந்துவிட்ட இருவரது குடும்பங்களை தேடி வருகிறோம். விவரம் கிடைத்ததும் அவரவர் பெயரில் விரைவில் மீத மனைகளும் பதிவு செய்து தரப்படும். உடனிருந்து உதவிய அன்பு சகோதரர் திரு. நெல்லை மரைக்காயர் (மூத்த செய்தியாளர்), குவைத் சோசியல் மீடியா சகோதரர்கள், மற்றும் அணைத்து தோழமை உறவுகளுக்கும் எனது நன்றி..

வித்யாசாகர்
http://www.vithyasagar.com

Posted in அறிவிப்பு, வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வித்யாசாகரின் “சமத்துவம் போற்றும் சமூகப்பார்வை” (நேர்காணல்)

பேரன்பு கொண்ட அன்புள்ளங்கள் அனைவருக்கும் எனது இனிப்புத் தமிழ் வணக்கம்..

இது தான் சென்ற மாதம் 20.08.2018-ஆம் திகதியன்று இலங்கையின் தாருஸபா தொலைக்காட்சியின் மூலம் அன்புத் தம்பி திரு. றின்சான் அவர்கள் கண்ட நேர்காணல்..

இந்தச் சந்திப்பில், குறிப்பாக எமது குவைத்வாழ் தமிழர்கள் சார்பாகவும், உலக தமிழர்கள் சார்பாகவும் நிறைய உயர்க்கருத்துகள் பரிமாறப்பட்டுக்கொண்டன. இரண்டாம் பகுதியில், அதாவது இறுதி பகுதியில் மிக முக்கியமாக இச்சமூகம் குறித்து நிறைய விடயங்களை பகிர்ந்துக்கொண்டோம். சாதியின் மனக்கீறல்கள் குறித்தும், பெண்களின் சாய்நிலை நீதி பற்றியும் எண்ணற்ற விடயங்களை பகிர்ந்துக்கொண்டோம். அன்புள்ளங்கள் எல்லோரும் பார்த்து கருத்துக் கூறுங்கள்.

அன்று பல வேலைகளினூடே அலைச்சலினூடே ஓடிச்சென்று கேள்விகளின் முன் அமர்ந்தாலும் எந்த சமரசமும் இன்றி, முன்னேற்பாடும் இல்லாமல், நேரடியாக நிகழ்ச்சியில் அமர்ந்து மனவோட்டப்படி பேசிக்கொண்டோம்.

என்றாலும், இவ்வளவு வெளிப்படையாகப் பேசவும், உரிய நேரமெடுத்துக்கொள்ளவும் நிறைவான வாய்ப்பையமைத்துத் தந்த தாருஸபா தொலைக்காட்சி நிறுவனத்திற்கும்,அதன் உரிமையாளர் பேரன்பிற்குரிய “அல்-உஸ்தாத் மௌலவி சபா அவர்களுக்கும், தம்பி திரு. ரிம்ஸான் அவர்களுக்கும் நிறைந்த நன்றியும் வணக்கமும்..

எனது முகநூல் சொந்தங்கள் அனைவருக்கும், உலக தமிழ் உறவுகள் அனைவருக்கும் உளம்பூரிக்கும் நன்றியும் வணக்கமும்..

வித்யாசாகர்

Posted in அறிவிப்பு, கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

33, நிலா தெரியும் கடல்..

 

 

 

 

 

1)
ஒ
ரு மரத்தில் ஆயிரம்
இலைகள் முளைப்பதைப்போல
மலர்கள் பூப்பதைப்போல் நாமும்
இலைகளாய் மலர்களாய் உயிர்திருக்கிறோம்..

நமக்கு வேர் ஒன்று
கிளைகளின் வகை ஒன்று
இலைகளுள் கிளைகளுள் கனிகளுள் பாயும்
நீரோ ரத்தமோ எல்லாம் ஒன்றே; ஒன்றே;

உலகம் வெளியில் உள்ள
மரத்தைப் பார்க்கிறது
அதற்குத் தெரிவதில்லை; நாமும்
அந்த மரத்தின் ஒரு இலைதானென்று…
———————————————————————————-

2)
நி
லா எத்தனைப் பிரகாசமனதோ
அத்தனை வெப்பமுமானது,

சூரியன் எத்தனை வெளிச்சமானதோ
அத்தனை நெருப்பைக் கொண்டது

பழங்கள் எவ்வளவு இனிப்புடையதோ
அதேயளவு காய்த்து கசப்பையும் செரித்ததே,

மனிதருக்குள்ளும்
வெப்பமுண்டு கோபமுண்டு
கசப்புண்டு பொறாமையுண்டு
ஈரமுண்டு வெறுப்புண்டு
சதையும் எலும்புமாய் ஆசையும் சலிப்பும்
அகல விரிந்த குளம்போல
உள்ளேக் கொட்டிக்கிடக்கும்
நாற்றமாய் காமமும் உண்டு,

அதத்தனையும் பழுத்தால் செரித்தால்
அன்பில் அணைத்தால்
வெறும் அமைதியும் இனிப்பும் வெளிச்சமும்
பிரகாசமும்
நம்மிடையேயும் உண்டு தோழர்களே..,

நமக்குத்தான் –
நமக்குள் இருக்கும் நிலவும் சூரியனும்
காற்றும் நெருப்பும் நீரும் கடலும்
எங்கோ தூரத்தில் மட்டுமே தெரிகிறது..
——————————————————————-
வித்யாசாகர்

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்