சிறப்பாக நடந்தேறிய ரத்த தான முகாம்; குவைத்!

அன்புள்ளங்களுக்கு வணக்கம்,

தவி என்பது தன்னால் இயன்றதை மட்டுமே செய்வதல்ல, இயன்றவரை செய்வது. அதை நிரூபிக்கும்வண்ணம் ‘இன்று குவைத் ஜாப்ரியா மருத்துவமனையில் முன்பு நாம் குறிப்பிட்டிருந்தது போல் ‘ரத்த தான முகாம் மிக சிறப்பாக நடந்தேறியது.

குவைத்தின் நிறைய அமைப்புகள் ‘மன்றவேற்றுமையோ, தூரம் எனும் சிரமமோ இன்றி காலை எட்டு மணிக்கே வரத் துவங்கி மதியம் ஒரு மணியளவில் நிறைவுறும் வரை இருந்து பெருமை சேர்த்தது மகிழ்விற்குரியது.

தூரத்திலிருந்து வருபவர்களுக்கு வாகன வசதியும் செய்துகொடுத்து, வந்தவர்களுக்கு சுவை மிகு காலை உணவும் வழங்கி, ரத்தம் கொடுத்து செல்கையில் பழமுடிப்பும், சான்றிதழ்களும் அளித்து பெருமகிழ்வு கொண்டன முத்தமிழ்மன்றமும் உதவும் கைகள் அமைப்பும்.

மிழன் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்திருக்கவே முற்படுகிறான். இனி, இணைந்தே இருப்பான் எனும் நம்பிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டாய் ‘இம் முகாமினை மிக சிறப்பாக நடத்தி காட்டியது இந்த இரு நல்ல அமைப்புகளும்.

ன்றிகளால் கனத்து இனி இன்னும் வேறு என்னவெல்லாம் செய்யலாமென்று துடிப்போடிருந்த அம்மன்றத்தின் தலைவர்கள்  திரு.ஜெயபாலன், திரு.ராஜேந்திரன் மற்றும் பொறுப்பாளர்களுக்கு என் பெருத்த அன்பின் வணக்கத்தையும் நம் நன்றிகளையும் தெரிவிப்போம்.

ரு மனிதன் என்னவேண்டுமாயினும் செய்து போகட்டும் ‘ஒரு உயிர் துடிக்கையில் தாங்க இயலாதவனாய் தன்னை மாற்றிக் கொள்வானெனில்’ அவனால் தீயதை செய்யவே இயலாது. இனியாவது நம் பூமியை இது போன்ற தொடர் நற்செயல்களால் ‘மனிதர்கள் வாழும் பூமியாய் மாற்றுவோம்.

ம் வாழ்தலில்; வளர்தலில்; இனியேனும் தழைக்கட்டும் மனிதம்!

வித்யாசாகர்

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு (51)

ளர்ந்து நீ
பெரியவனாகி
என்னென்னவோ
செய்ய வேண்டுமென்றெல்லாம்
எனக்கு கனவுகளில்லை,

நீ நன்றாக வளர்வாய்
உனக்கு நான்
பலமாக மட்டுமே இருப்பேன்,

கடைசி வரை நீயெனக்கு;
இல்லையில்லை –
நான் உனக்கு
அப்பாவாக இருப்பதொன்றே போதும்!
—————————————————-

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு (55)

ஸ்டேப்ளர் பின்னென்றாலே
சிலருக்கு உடனே புரியும்,

அப்படியொரு சிறு கம்பி
மதிய உணவிலிருந்து
பல்லின் இடுக்கில் மாட்டி குத்தியது,

உன் அம்மாவின் மேல்
அப்படி ஒரு கோபமெனக்கு,

சாப்பாட்டில்
கம்பி இருந்ததால் அல்ல;

அதை நீ; தின்றிருந்தால்?!!
———————————————–

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு (54)

உன்னை
யார் கண்டாலும்
எல்லோருக்கும் தான் பிடிக்கிறது;

எல்லோரிடமும் கொடுத்துவிட்டு
தனியாக நிற்பதில்

நீ இல்லாத என்
கைகள்
இருக்கவே ஆசையில்லை
எனக்கு!
———————————-

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு (53)

லுவல் விட்டு
இதர வேலைகள் விட்டு
எல்லாம் விட்டு
உனக்காக உன்னோடிருக்கும்
கொஞ்ச நேரமே;

எனக்கான நேரமென்று
எனக்கொரு பூரிப்பு!
———————————-

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்