ஞானமடா நீயெனக்கு (52)

னக்கு பிடித்ததை மட்டுமே
நான் வாங்க
முயல்வேன்;

உனக்குப் பிடிக்காதது
என்று ஒதுக்கிய
சிலதில்
என் பெயரும் ஏனோ
முன்னுக்கு வருகிறது,

ஆம்; நிறைய வீடுகளில்
நிறைய அப்பாக்களை
நிறைய பிள்ளைகளுக்கு பிடிப்பதில்லை போல்;

அடிக்காத அப்பாக்களை தவிர!
—————————————————-

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு (50)

ன்னவோ வளர்கிறாயடா நீ
ஏன் நான் கண்டிக்கிறேன் என்று கூட
புரிய மறுக்கிறாய்;

உன் நிராகரிப்பில் நான்
எத்தனை உடைகிறேன் என்பதை
நீ புரிந்துகொள்ளும் காலம் வரை
காத்திருப்பது –

ஏதோ என் தவறிற்கான
இறைவனின் தண்டனை என்று
நினைத்துக் கொள்கிறேன்!!
——————————

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு (49)

குழந்தைகளில்
மிக சிறந்தவன் நீ
என்று நினைப்பேன்;

உண்மை தான்
மிகச் சிறந்தவன் நீ,

அதனால் தான்
என்னை உனக்கு
பிடிப்பதில்லை போல்!
———————-

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு (48)

னக்கு காய்ச்சலென்று
முடியாமல் மடி மீது
படுத்திருக்கிறாய்,

உன் வலி தாளாத
முகம் பார்க்க பார்க்க
என் ஏழேழு பிறப்பினையும்
சபிக்கிறது மனசு!
—————————–

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு (47)

நீ முடியாமல்
ம்.. ம்.. என்று
உம் கொட்டி
படுத்திருக்கிறாய்

உன் –
ஒவ்வொரு ம்.. சப்தமும்
எனை கொண்று கொன்றே
பிறப்பிக்கிறதென –
உன் காய்ச்சலுக்குத்
தெரிவதேயில்லை!
——————————————-

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக