உடைந்த கடவுள் – 35

ன்றெல்லாம்
சுடுகாட்டில் இருக்கும்
வெட்டியான்களை எல்லாம்
விட்டுவிட்டு
வீட்டிற்கு வந்து என்னை
பேய் தின்று விடுமோ என்றே
பயம் வரும்;

இன்றும் அதே பயம்
வீடு சுற்றி
நாடு சுற்றி
மனசாட்சியை கொன்றுகொண்ட
பேய்களே உலவுகிறது;

சுடுகாடே –
மேல்போல்!!
——————————————–

Posted in உடைந்த கடவுள் | 6 பின்னூட்டங்கள்

உடைந்த கடவுள் – 34

வாழ்க்கை
வெங்காயம் போல்
என்றார் யாரோ;

உரிக்க உரிக்க
கண்ணீராம்.

உரிபடுவதேயில்லை
இப்போதெல்லாம்
நிறைய பேரின் வாழ்க்கை;

வெங்காயம் என்று
வாழ்க்கையை சொல்லிக் கொண்டதில்
கண்ணீர் மட்டும் மிட்சம் போல்.

என்னை கேட்டால்
வாழ்க்கை பற்றி கேட்காதீர்கள்
உங்கள் வாழ்க்கையை யாரிடமும் தேடாதீர்கள்
வாழுங்கள் என்பேன்!!
———————————————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடைந்த கடவுள் – 33

நிறைய வீடுகளில்
நிறைய அறைகள்
புழக்கமின்றியே கிடக்கிறது;

வீடற்று இருப்பவர்களை பற்றி
அந்த அறைகளுக்கு
எந்த கவலைகளும் இல்லை,

தெருவில் உண்டு
உறங்கி
புணர்ந்து
தலைமுறைகளை கடக்கும்
ஒரு சாமானியனின் தேவை
நான்கு சுவர் மட்டுமே என
அந்த –
வெற்றுக் கட்டிடமான
கல் மண் கலவைகளுக்குப்
புரிவதேயில்லை!
————————————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடைந்த கடவுள் – 32

னக்குத் தெரிந்து
கல் சுமக்கும்
பீடி சுற்றும்
உணவகத்தில் மேசை துடைக்கும்
பட்டாசுகளுக்கிடையில் வேலை செய்யும்
தேநிர்கொண்டு வந்து கொடுக்கும்
சிறுவர்களின் வியர்வையில் தான்
நசுக்கப் படுகின்றது
நம் தேசத்தின்
முன்னேற்றத்திற்கான விதைகள்!
————————————————-

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

உலகமும்; ஒரு சின்ன எச்சரிக்கையும் (31)

ப்படியெல்லாம்
செய்தால்
உங்களுக்கு கோபம் வரும் என்றார்; ஒருவர்

‘ஏன்’ என்றேன்

‘சரி என்ன சொன்னால்
கோபப் படுவீர்கள் என்றார்

‘எதற்கு கோபப் படவேண்டும்’ என்றென்

‘அப்போ உங்களுக்கு கோபமே
வராதா’ என்றார்

‘நான் சொன்னேனா’ என்றென்

‘அப்போ
கோபப் படுவீர்களா’ என்று
கேட்டார்

‘படலாம்’ என்றேன்

‘கோபப் அப்டுவீங்களா?!!!
கோபப் படுவீங்களா நீங்க!!!?’ ஆச்சர்யத்தில்
புருவம் உயர்த்திக் கொண்டார்

சிரித்துக் கொண்டேன்

‘சாதுங்க நீங்க’ என்றார்

அவரையே பார்த்தேன்

‘ஆழமான பார்வை உங்களுக்கு’ என்றார்

‘அப்படியா?’

‘ஆமாங்க’

‘உண்மையாகவா?’

‘அட சத்தியமாங்க’

‘ஏன் நீங்க அப்படி
பார்க்க மாட்டீர்களா?’

‘பார்ப்பேனே.. பார்ப்பேனே.. தோ..’ அவர்
கண்களை ஆந்தை மாதிரி உருட்டிக் காட்டினார்

‘அசிங்கமா இருக்கே’ என்றேன்

‘ஏன்..???????????????!!!!!!!’

‘ஆமாங்க நல்லாவே இல்ல’ என்றேன்

‘ஏன்..???????????????!!!!!!!’

‘குருடு மாதிரி இருக்கு?’

‘குருடா….!!! யாரு?’

‘நீங்க தான்
ஆந்தை மாதிரி முழிக்கிறீங்க’ சற்று நமுட்டாக
சிரித்துக் கொண்டேன்

‘நானா???!!! நானா???!! ஆந்தையா??
என்னை பார்த்தா ஆந்தை மாதிரி தெரியுதா???
நீ மட்டுமென்ன யோக்கியமா – உனக்கும் தான்
நொள்ள கண்ணு’ என்றார் வெடுக்கென்று

‘இப்பதான் சாது’ன்னீங்க

‘ஐயோ; ஐயோ; நீயா சாது!!?
மொடாகண்டன் நீ’

‘ஆழமான பார்வைன்னு கூட
சொன்னீங்களே’

‘அப்போ சொன்னேன்
இப்போ இல்லை, நீ அப்படியில்லை’ என்றார் கோபம்
தலைக்கேறியவராக

‘ஒரே நிமிடத்தில் மாறிவிட்டேனா’ என்றேன்

‘நீ எப்பவுமே
இப்படித் தான் போல
நான் தான் தவறாக புரிந்துக் கொண்டேன்’ என்றார்

‘சரி, இப்போவாவது
புரிந்துக் கொண்டீர்களா’ என்றேன்

‘புரிது புரிது; நீ போ’ என்று
சலித்துக் கொண்டார்

நான் மௌனமாக அங்கிருந்து
நடக்கலானேன்

அவரென்னை
பயித்தியம் என்று
பக்கத்தில் இருந்த யாரையோ அழைத்து சொல்லி
கோபமாக பேசினார்

நான்
திரும்பிக் கூட
பார்க்கவில்லை அவரை

அவரின் சப்தம்
என் காதில் வெகு வேகமாக
குறைந்துக் கொள்ளுமாறு
மிக வேகமாக நடந்தேன்

உலகத்தின் நடத்தை
மனிதரின் மனசு
நாம் தலையாட்டும் வரை தான்;

ஒரு கண்ணை பிடுங்க எண்ணினால்
இரு கண்ணை கொடுக்க
தயாராக இருங்கள் என்பது மட்டுமே என்
உலகத்திற்கான எச்சரிக்கை!
————————————————————
வித்யாசாகர்

Posted in உடைந்த கடவுள், கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்