3) GTV – இல் நம் ‘மனிதத்தை மண் தின்ற நாள்’ கவிதை!

அன்புடன் வித்யாசாகருக்கு….

உங்கள் மற்றுமொரு கவிதைக்கு ஒலி மற்றும் ஒளி வடிவம் கொடுத்து நிகழ்ச்சியில் சேர்த்துக் கொண்டேன். கீழ்க்காணும் இணைப்பில் உள்ளது. காணவும்.

நன்றி.

என்றென்றும் வாழ்த்துக்களுடன்
றேனுகா

Posted in GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

அன்பு தம்பி விஜய ரூபனுக்கு வாழ்த்து!

னசார அன்பை விதவிதச்சி
என் மனசெல்லாம் விதைச்ச தம்பி,
கவிதை படிச்ச அன்பால
உடன் பிறக்காமல் உற்ற தம்பி;

வானம் போல மனசால
ஞானம் – கூட நிரஞ்ச தம்பி,
இனம் காக்கும் உணர்வுள்ள
எழுச்சிக் குறையா நல்ல தம்பி;

இணையத் தாய் கொடுத்த உறவில்
ஈழ மண்ணை போற்றும் தம்பி
என் இனம் காக்க பிடித்த கொடியில்
இன்னொரு கை கொடுத்த – தம்பி;

முகநூல் தமிழேட்டில்
முகம் பார்க்க கிடைத்த தம்பி,
முழு வாழ்க்கை வரமாக – இனி எப்போதும் இருக்கும் தம்பி!

இனிய விஜய ரூபனுக்கு
என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்;

அனைத்து பேரும் புகழும்
வாழ்வின் நற்செல்வங்களும் பெற்று;
நீடூழி நலம் வாழ்ந்து –
நல்ல கவி’யாய் பாரினில் திகழ்ந்து
பெரும் பேருகளோடு நீடு வாழி!!

பேரன்புடன்..

வித்யாசாகர்

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

உடைந்த கடவுள் – 30

ண்ண
உணவில்லாதவர்கள்
கோல்கேட் பற்பசை பற்றியோ
குச்சி வைத்தாவது
பல் துலக்காதது பற்றியோ
வருத்தம் கொள்வதேயில்லை’ என்று
குறிப்பெடுத்துக் கொள்ளும் அளவில் மட்டுமே
நம் சமுதாய பற்று –
மனம் நிறைந்து கொள்கிறது!
———————————————————————–

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

உடைந்த கடவுள் – 29

தெரு வுடைத்து
தார் பிரித்து
ஜல்லிகள் நிரப்பி
வேர்வையில் ஊறிப் போகும்
தொழிலாளிகளின்
கால் வெடிப்பும்,

வயிற்றுப் பசியும்,

தெருவோர தூசிகளில்
தூளிகட்டி –
கிழிந்த புடவியின் வழியே
அம்மா வருவாளா
தூக்கிக் கொள்வாளா எனப் பார்க்கும்
ஏக்கத்தின் தடங்களும்

தன் அடையாளங்களை
நல்ல தார்சாலையாக மட்டுமே
காட்டிக் கொண்டிருக்கின்றன!
————————————————————————

Posted in உடைந்த கடவுள், கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உடைந்த கடவுள் – 28

ட்லி கடை
வாசலில்
கைக்குழந்தையோடு ஒரு
பிச்சை காரி நிற்கிறாள்;

நான் கை கழுவிக் கொண்டு
அவளுக்கு ஒரு பொட்டலம்
கட்டச் சொன்னேன்,

‘நீ ஏய்யா பசியோட போற
இவளுங்க இப்படி தான், பொய்யி;
அது யார் பெத்த குழந்தையோ
இவ தூக்கிக்குனு அலையறா,
‘தா போ அங்குட்டு;

அந்த கடைக்கார தாய்
எனக்காக அவளை விரட்டினாள்,

அந்த கைக் குழந்தை
வீல் என்று கத்தியது..

‘குழந்தைகள் தான் பாவம்
இப்படி எங்கேனும் இருந்து
குழந்தை வாங்கி வருவது
நாம் சோறு போடவில்லை என்றாள்
குழந்தையை பிடித்துக் கிள்ளுவதாம்’

இப்பல்லாம் இப்படி
ஒரு கும்பலே அலைகிறதாம்,
பக்கத்து கடைக்காரர் வந்து
சொன்னார்.

யார் யார் எல்லாம் பொய்யோ
என் மெய் எனக்கு வலித்தது!
———————————————————————

Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்