14 குறுந்தகவலில் காதல் சொன்னாய்..

ன் வாசத்தில் ஒரு சொட்டு
உன் தாவணிப் பூவிலிருந்து
விழுகிறது –

அள்ளிப் பருகும் காற்றிடம்
கோபம் கொண்டு – உன்
தாவணியை பிடித்தேன் நான்

எனை முறைக்க வில்லை நீ
சிரிக்கவில்லை
பார்க்கிறாய்
பார்க்கிறாய்
அப்படி பார்க்கிறாய்

உன் தாவணி எடுத்து
இரு கை நிறைத்து உயிர்வரை
நுகர்கிறேன் நான்

உன் வாசம் என்னுள்ளே சென்று
என்னவோ செய்வதற்குள்
தாவணியை இழுத்துக் கொண்டு ஓடுகிறாய் நீ

காதலிக்கிறாய் என்னும் பதில்கள் மட்டும்
உன் தாவணிப் பூவிலிருந்து உதிர்ந்து
ஆம் ஆம் ஆம் என்றென கீழே
விழுந்து கொண்டே போகிறது!!
—————————————————————————-

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

13 குறுந்தகவலில் காதல் சொன்னாய்..

ன் கைகடிகாரப் பட்டையின்
உள்ளே சொருகி வைத்திருந்த
புகைவண்டியின் அனுமதி சீட்டு
கீழே விழுந்து விடுகிறது.

நீ எடுக்காமலே
புகைவண்டியிலிருந்து
இறங்கிப் போகிறாய்.

நான் தவற விட்டு விட்டாயோ
எப்படியேனும் –
எடுத்துக் கொடுப்பது போல் உன்னை
அருகில் வந்து பார்த்து விடலாமென
எடுத்துக் கொண்டு ஓடி வருகிறேன்.

நான் அருகில் வந்ததும்
நீ சிரித்துவிட்டு –
நான் தானே போட்டு வந்தேன்
ஏன் எடுத்து வந்தீர்கள் என்றாய்.

நான் சற்று முழிக்க
அங்கேயே சென்று போடுங்கள்
ஒரு நல்ல சேதி வருமென்று நீ சொன்னாய்.

ஓடி சென்று அங்கே போட்டேன்
என் அலைபேசியில் ஒரு
குறுந்தகவல் வந்தது,

குறுந்தகவலில் அந்த சீட்டை
பிரித்துப் பார் என்றிருந்தது,

ஆவலோடு
பிரித்துப் பார்க்கிறேன்
நீ என்னை –
காதலிப்பதாய் எழுதி இருந்தாய்….
—————————————————————————-

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

11 உடைந்த கடவுள்..

லகம் சுற்றி
நடக்கும் கொடுமைகளால்
ஒன்றிரண்டாய்
தென்படுகிறது மனிதத்தின் தலை
தென்படாத
மனிதத்திற்கிடையே உடைகிறது கடவுள்!

இருநூறு ஆண்டுகளுக்கு மேல்
அடிமை பட்டு கிடந்த மண்ணில்
புதைந்த உயிர்களின்
மறந்த வலியால் –
ஈழத்தில் நடந்த கொலைகளில் – உடைந்தது கடவுள்!

தெருவெல்லாம் பிச்சையெடுத்து
வழி நெடுகும்
இரைந்த வறுமைக்கு
வழி தேடாத அரசின் மெத்தனத்தில்
உடைகிறது கடவுள்!

பகலெல்லாம் வெய்யிலில் கல்சுமந்து
உடல் வாட்டும் இரவு குளிரில் வெல்டிங் அடித்து
இரும்படித்த வியர்வையின் அசதியில்
சேற்றுசகதியில் சுண்ணாம்பில் வெந்து போன உழைப்பில்
கூளிவேலையில் மாரடிக்கும் பணத்தில்
வாய்கூசாமல் லஞ்சம் கேட்கும்
களவானிகளின் மேதாவி தனத்தில்
உடைந்தே போகிறது கடவுள்!

அவசரத்திற்கு செய்த உதவி போக
நூற்றிற்கு பத்து வட்டியென
உறிஞ்சிக் குடிக்கும் ரத்தத்து நெடியை
வீட்டில் சொத்தாக சேர்க்கும்
வட்டிப் பணத்தில் – உடைந்தது கடவுள்!

நூறு ரூபாய்க்கு துணி வாங்கி
நூற்றி ஐம்பதுக்கு சட்டை தைத்து
தினமும் இரண்டு ரூபாயில் பெட்டி போட்டும்
ஒரு ரூபாயில் பட்டினி கிடக்கும்
ஏழைகளை நினைக்காததில் – உடைகிறது கடவுள்!

கூரைவீட்டு ஓட்டை வழியே
கிழிந்த ரவிக்கை உடம்பு தேடும்
மாடிவீட்டு தோள் பசிக்கு
விலையாகும் முதிர்கன்னிகளின்
விலைபோகா உத்தமிகளின் ஒரு சொட்டுக் கண்ணீரில்
கிடைக்காத வாழ்க்கையாக உடைகிறது கடவுள்!

பார்வைக்கே உயிர்விட்டு
அருகாமைக்கு தவமிருந்து
உடலெல்லாம் காதல் பூத்து
கிடைக்காத காதலிக்கு
மரணத்தை பரிசளிக்கும்
தெளிவில்லா இளைஞர்களின் இளம்பெண்களின்
பெற்றோர்களின் அறியாமையிலும்
புரிந்து கொள்ளாத அன்பிலும் – உடைந்தே போகிறது கடவுள்!

பொட்டிழந்த நெற்றியிலிருந்து
விட்டொழியா காமப் பசிக்கு
நாம் தந்த விதவையென்னும் ஒற்றை பட்டத்தில்
ஊரெல்லாம் மேயும் கண்களின் கொடூரத்தில்
கணினி புத்தகம் தொலைகாட்சி திரைப்படமென
விநியோகிக்கும் – காம ஆசையில்,
இன்றும் அவர்களை ஒதுக்கியே பார்க்கும்
தனிமையின் கொடுமையில்
கருகி உதிரும் இளம் இதயங்களின் முறிவில்;
உடைந்தே போகிறது கடவுள்!

காவல் காக்க உடையுடுத்தி
அதட்டிய குரலில் கேட்டதெல்லாம் பெற்று
சோறு போட்ட மக்கள் பணத்தில்
சேலை வாங்கி கொடுத்த நன்றியை
வாங்கித் தின்ற கையேடு மறந்ததில்,
அநீதிகள் அழிய பார்த்து
அடக்க முடியாத காக்கி சட்டையின் கோழை தனத்தில்
உடைந்தது கடவுள்!

வெள்ளையாய் ஆடை உடுத்தி,
கருப்பில் இதயம் சுமந்து,
குடிக்கும் போதைக்கு காரம் வேண்டி – ஏழைகளின் ரத்தத்தில்
உப்பு சுவைத்து,
ஏசி காரில் –
குளிரும் உடலுக்கு வெப்பமூட்டும் இளைய பெண்கள் தேடி,
மூட அரசியல் நடத்தும் –
மூர்க்கர் சிலரின் செய்யாத கடமைகளில்
உடைகிறது கடவுள்!

கடவுளின் ஒளி அகற்றி
காமத்தின் வெளி புகுந்து
காசுக்கு மதம் விற்ற –
கயவனின் வாக்கில் உதித்த
அத்தனை பொய்தனிலும்
உடைந்தது உடைந்தது உடைந்தது கடவுள்!

மதத்தில் கடவுள் அறுத்து
மனிதத்தில் மதம் திணித்து
மதத்திற்காய்; மனிதனின் தலை கொய்து
சொட்டிய ரத்தத்தின் ஈரமெலாம்
இரக்கமின்றி கடவுள் பெயரெழுதி
மறக்கும் துறக்கும் மதத்தின் திணிப்புகளில்
மதத்தால் மனிதன் மாண்ட இடத்திலிருந்து
உடைந்தே போனது கடவுள்!

உருவம் உண்டென்று சொல்லி
அருவம் ஒன்றென்று சொல்லி
கடவுள் உண்டென்று சொல்லி
எவனும் இல்லையென்று சொல்லி
நன்றி மறந்த களிப்பில்; கடவுள் இல்லாமல் போகும் இருப்பில்
எல்லாமுமாய் இருக்கும் கடவுள்
இல்லாமலே போக –
மனிதன் ஆற்றிய குற்றந்தனில் உடைந்தது; உடைந்தது;
உடைந்தே போனது; உள்ள கடவுள்!!
———————————————————–
வித்யாசாகர்

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

உடைந்த கடவுள் – 13

ம்பது சதவிகிதம்
தள்ளுபடி;

எல்லாமே வெளிநாட்டிலிருந்து
இறக்குமதி செய்த ஆடைகள்;

இரண்டு வாங்கினால்
ஒன்று இனாமாக தரப் படும்;

வேறெங்குமே
கிடைத்திடாத தரம்;

இப்படியெல்லாம் ஏமாற்றித் தான்
விலைபோகிறது –
ஏழைகளின் வியர்வையும் ரத்தமும்!!
————————————————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

10 உடைந்த கடவுள்!!

ந்து
பொந்துகளிலெல்லாம்
வீழ்கிறது
மனிதம்;

எந்த புள்ளியில்
பிறர்
மன்னிக்கப் படுகின்றனரோ
அந்த புள்ளியிலிருந்தே மனிதம்
வீழாதிருக்கலாம்;
வீழ்ந்தும் போகலாம்!
————————————–

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக