வட்டிக்கு
பணம் வாங்கி
வட்டிக்கு
பணம் வாங்கி
உடைகிறது சேமிக்கும்
மனப்பான்மை;
இல்லாமலே போகிறது
மனசாட்சி!!
——————————
வட்டிக்கு
பணம் வாங்கி
வட்டிக்கு
பணம் வாங்கி
உடைகிறது சேமிக்கும்
மனப்பான்மை;
இல்லாமலே போகிறது
மனசாட்சி!!
——————————
எங்கெங்கோ
யார் யாரோ
பேசிக் கொள்கிறார்கள் –
அவன் சரியில்லை
அது செய்தது
உலகமே அப்படித் தான் என்றெல்லாம்;
நான் இப்படித்தானென்று
ஒத்துக் கொள்ள –
யாருக்குமே துணிவில்லை!!
———————————————-
சுட்டெரிக்கும் சமுகத்தில்
சுயமாக –
எல்லோரும் சிந்திக்காதலில்
ஒவ்வொன்றாய் நிகழ்கிறது
கொலைகள்;
மதமென்றும்
ஜாதியென்றும்..
இனமென்றும்
பணமென்றும்..
உறவேண்டும்
காதலென்றும்..
கடவுளென்றும் கூட!!!
—————————————–
மனிதன் செய்யும்
தவறுகளில் –
கடவுள் உதவிக்கழைக்கப் பட்டு
கடவுள் தோற்கடிக்கப் பட்டு
கடவுள் குறை சொல்லப் பட்டு
கடவுள் குற்றம் சாட்டப் பட்டு
கடவுள் மறுக்கப் பட்டு
கடவுள் சபிக்கப் பட்டு
கடவுள் உடைந்து தான் போனார்.
மனிதன்
உடைக்கவில்லை என்கிறான்;
கடவுள் மனிதனை
‘உடைத்ததாக சொல்வதேயில்லை.
கடவுள்
கடவுளாகவே இருக்கிறார்!!
——————————————
என்னால் சந்தோசத்தை
பகிரமுடிவதில்லை.
முழுதாய் உணரவும்
துய்க்கவும் முடிவதில்லை.
கண் மூடினால்
கற்பு களவாட படும் –
கண் திறந்தால்
கற்பு அழிக்கப்படும் என
கங்கணம் கட்டிகொண்டிருக்கும்
கள்வர்களுக்கு மத்தியில் –
காற்றில் கரைந்து விட
துடித்து கொண்டிருக்கும் என்
சகோதரியின் அவலத்தை நினைக்கையில் –
எப்படி என்னால் இன்பத்தை
துய்க்க முடியும்???
துக்கத்தின் அடக்க முடியா
வெளிப்பாடினை –
விழிநீர் உடைப்பெடுத்து
வெளிபடுவதை கூட ஊரார்
ஆனந்த கண்ணீரென –
அடையாள படுத்துகின்றனர்;
உணர்வுகளை
வேரோடு பிடுங்கி எரிந்தபின்
வெறும் வெற்றுடம்பாய்
இதயம் இருந்த இடத்தில
இயந்திரத்தை பொருத்திக்கொண்டு
கட்டளைகளை நிறைவேற்றி கொண்டிருக்கிறேன்!!
————————————————————————
எப்போது உன்
மானம் அழிக்கப்பட்டு அந்த
மண்ணில் விழுந்து
மாண்டயோ;
அபோதே பறிபோனது
உன்னோடுஎன் உயிரும் …
————————————————————————
எத்தனை போர்க்களம்
வந்தாலும்
ஆணுக்கு மட்டுமே
அது பொற்காலம்;
பெண்ணுக்கு –
போதாத காலம் தான்!
————————————————————————
நீங்கள் வீழ்த்தியதாக
நினைத்து மார்தட்டிக் கொள்வது
எங்களின் குல கொழுந்தை;
உங்களின் சந்ததிகளை
வளர்க்கும் வளமான மண்ணை;
உங்கள் விதைகளை மட்டும்
வைத்து ஒரு போதும்
விருச்சத்தை உருவாக்க முடியாது.
இந்த உண்மை புரியும் போது –
கழுகுகளின் கடைசி உணவாய் நீ இருப்பாய்!!
————————————————————————
எழுச்சிக் கவிதாயினி ‘சரளா’
கோவை.