ஞானமடா நீயெனக்கு – 20

டுக்கையில் –
தலையணை, மெத்தை
போர்வைக்குப் பின்னும்
உன் புதிய வருகையால்
ஏற்பட்ட சின்ன இடைவெளியை,
இருவரையும் சேர்த்து நீ
அனைத்துக் கொண்ட
இறுக்கத்தில் –
நீயாகவே; தீர்த்துக் கொண்டாய்!

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 19

பை நிறைய சுமந்த
உன் –
புத்தகமாகத் தான்
முழுதும்
படிக்கமுடியாமலே
கனக்கிறாய்
எனக்குள்ளும் நீ!

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 18

வேலைக்கிடையிலும்
உனை நினைக்கும்
பொழுதிலும்
நீ என்னோடில்லாத –
இடைவெளிக்குள்ளும்
கேட்டுக் கொண்டு
தானிருக்கிறது;

நீ –
அப்பா அப்பா என்றழைக்கும்
அந்த இனிய குரல்!

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக

மரணத்தை மீட்டெடுப்போம் (26)

ரண்டற கலக்காத நெஞ்சில்
வஞ்சமற்று வாழ்கையில்,

கெடுத்தவனை
திருத்த முயல்கையில்,

அடித்தவனை
திருப்பி அடிக்கவும் –
அணைக்கவும் முடிகையில்,

அன்புருதலில்,

இல்லாதாரிடம்
இருப்பதில் –
இயன்றவரை பகிர்ந்து கொள்கையில்,

இருப்பவரை கண்டு
ஏங்கி நிற்காமையில்,

எத்துணிவு பெற்றும்
பணிவுருகையில்,

பணிபவரை
மதிக்க கற்கையில்,

மதியாதாரை
புரிந்து கொள்கையில்,

தவறென்று கண்டால்
பொங்கி எழுகையில்,

தன் தவறாயினும்
திருத்திக் கொள்கையில்,

எவருக்கும்
அஞ்சாதிருத்தலில்,

எல்லாம்
வெல்லத் துணிகையில்,

எதையும் செய்துதீர்க்க
நம்பிக்கை கொள்ளுதலில்,

தோல்விக்குக் காரணம்
‘தானே’ யென்று உணர்தலில்,

மீண்டும் மீண்டும்
முயற்ச்சி செய்தலில்,

பிறரையும்
நம்புதலில்,

எவரையும்
துச்சப் படுத்தாமையில்.

வென்றவரை
போற்றி மகிழ்தலில்,

பொறாமையை அறவே அறவே
ஒழிக்கையில்,

போதுமென
நிறைதலில்,

ஏற்றத் தாழ்வினை
ஏற்படுத்தாமையில்,

போதை
ஒழித்தலில்,

பொய்யின்றி
வாழ்தலில் –

உண்மை ஒளிவட்டமாகும்
மரணம் மீட்கப் படும்!

மரணம் போகட்டும்
மனிதமாவது மிட்சப் படும்!
——————————————
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 10 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 60

னவில் நீ –
வருகிறாய்,

கனவிலிருந்து தொடரும்
உன்னையுமென்னையும்
பிரித்த சோகம்-
கனவுக்கு பின்னும் நீள்கிறது;

காலத்தின் கைகளில்
நீயும் நானும்
எப்பொழுதும் –
பிரிந்தே பிரிந்தே
கணவனும் மனைவியுமாக!!

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்