நானிங்கு
சம்பாதிக்கும்
பணம் –
இரக்கமின்றி தின்கிறது
நம் –
சந்தோசங்களையும்
சிரிப்பையும்;
இருந்தும் –
உலகிற்கு நாம்
நலமென்றே தெரிகிறது!!
நானிங்கு
சம்பாதிக்கும்
பணம் –
இரக்கமின்றி தின்கிறது
நம் –
சந்தோசங்களையும்
சிரிப்பையும்;
இருந்தும் –
உலகிற்கு நாம்
நலமென்றே தெரிகிறது!!
இங்கு நான்
கடக்கும் –
ஒவ்வொரு கணமும்
நீயில்லாத சொர்கத்தை
இழக்கும் –
ஒவ்வொரு –
துளிகள் என்பதை
யாரறிவார்!!
ஐயோ கடிதம்
அனுப்பக் கூட கையில்
பணமில்லையே – என நீ
அழுத அழையில்,
கடிதமில்லாமலே
புரிந்துவிட்டது – நீ
எழுதித் தீர்த்திடாத உன்
அத்தனை பாரங்களும்!
ஒரு சில
பொய்களில் ஜெயிக்கிறது
சிலரின் –
உண்மையற்ற வாழ்க்கை;
நானென் உண்மையை
உன் பொய்யற்ற அன்பில்
வெல்ல நினைக்கையில் –
உனக்கும் எனக்குமிடையே
குவைத்தும்
இந்தியாவுமாய்
எத்தனை பெரிய தூரம்!!
உறங்குவதற்கு
விளக்கை அணைக்கும்
ஒவ்வொரு இரவிலும் –
விழித்துக் கொண்டு அலறுகின்ற
உன் –
அத்தனை நினைவுகளால்
உறங்காமலே பூக்கின்றன
கனவு பூக்கள் –
படுக்கையை நனைத்த
கண்ணீரின் ஈரத்தில்!