ஞானமடா நீயெனக்கு – 8

கையசைத்துவிட்டு
பள்ளிக்கு செல்கிறாய்,

எனக்கென்னவோ
நான் தான் உனை விட்டுப்
பிரிவது போல் வலி,

நீ – குதூகலத்தோடு
ஓடிவந்து –
எனக்கொரு முத்தமிட்டு விட்டு
புதியதாய் ஒரு
சுதந்திரம் கிடைத்தாற்போல்
ஓடுகிறாய்;

எது உனக்கு
சந்தோஷம்?

எனைவிட்டுப் பிரிந்திருப்பதா
இல்லை,
யாருமே உனை கண்டித்திராத ஒரு
உலகமா???!!

Posted in ஞானமடா நீயெனக்கு | 1 பின்னூட்டம்

ஞானமடா நீயெனக்கு – 7

ங்கே வா
இதை எடுக்காதே
அதை செய்யாதே
அங்கே போகாதே
அடிப்பேன்.. உதைப்பேன் என்றெல்லாம்
மிரட்டுகையில்,
உனக்கு என் மீது
கோபம் வரும்போல்;
கண்களை கசக்கி நீ
என்னையே பார்ப்பாய்.

நீ மீண்டும் அங்கே போய்
அதை எடுத்து
எதையேனும் செய்து
எங்கேனும் போய்
எனை ஏமாற்றிவிட்டதாய்
துள்ளி குதிக்கும் அந்த சிரிப்பிற்காய்
நான் மீண்டும் காத்திருப்பேன்!

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 6

ரிரு பருக்கைகள் தான்
கீழே விழுகின்றன
நீ எடுத்து வாயில் வைக்கையில்
மிரட்டி –
நீ கீழே போட்டதும்
எடுத்து எங்கோ வீசுவேன்.
நீ நானென்னவோ நீ தின்பதை
பறித்துக் கொண்டதாய்
பார்ப்பாய்.
வேறென்ன, நான் கையில் வைத்திருக்கும்
உனக்கான ஒரு தட்டு சோறு
நான் தின்னாத மிச்சமென
உனக்கு தெரியவா போகிறது!

Posted in ஞானமடா நீயெனக்கு | 2 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு – 5

ன்
பிஞ்சு விரல்கள் பதிய
எனை –
கட்டிப் பிடித்துத் தூங்குகிறாய்;

எடுத்துவிட்டால்
எழுந்துவிடுவாயென
எடுக்கவுமில்லை
உறங்கவுமில்லை
நீ தூங்கும்வரை
விழித்திருக்கிறேன் நான்!

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 4

நீ தூங்கும் போது
பாடும் –
தாலாட்டில்
எந்த ராகமும் இல்லை;
நான் –
அம்மா என்பதை தவிர!

Posted in ஞானமடா நீயெனக்கு | 1 பின்னூட்டம்