பிரிவுக்குப் பின் – 48

ருந்துமாய்
இல்லாததுமாய் தான்
நகர்கிறது –
நம் வாழ்க்கை;
குவைத்திற்கும்..
சென்னைக்கும்..
நடுவே!

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 47

நீயும்
நானும்
பிரிந்த சந்தோசத்தில்
இந்த –
வெள்ளைத்தாள் காதலனுக்கு
எழுத்துக் காதலி
கிடைத்துவிட்ட –
பூரிப்பில் –
எப்படி இருவரும்
கவிதையாய்
சிரிக்கிறார்கள் பார்!

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 46

சாப்பிடும்போது
உணவில் –
பாதியை வைத்துவிட்டு
எழுந்தேன்;

அம்மா திட்டினாள்,

அவளுக்கென்ன – தெரியும்
நீயும் – இப்படி
பாதியில் வைத்துவிட்டுத்
தான் எழுந்திருந்திருப்பாய்
என்று!

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 45

னக்குமாய்
என் எழுதுகோல்
எழுதத் துவங்கி விட்டதற்காய்
அதற்கு மட்டும்
நன்றி சொல்லாதே
இதயம் –
கோபித்துக் கொள்ளும்!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 44

னக்கும்
எனக்கும்
தூரங்கள் நீள்கிறது
இதயத்தின் நிழல்கள்
கைகளில்
விழுந்த படியே!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக