பிரிவுக்குப் பின் – 43

நீ
இல்லாத பொழுது
இல்லாத இடம்
இல்லாத வாழ்க்கை
இல்லாத வாழ்க்கையே தவிர
வேறில்லை!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 42

ன்று தீபாவளி
நம் ஊரில் இந்நேரம்
பட்டாசெல்லாம் வெடித்து
புதுத் துணியெல்லாம்
உடுத்தியிருப்பீர்கள் –
இங்கு என் மனசும்
உன் நினைவுகளால்
பட்டாசை வெடித்துக் கொண்டுதானிருக்கிறது;
நீ அனுப்பிய எனக்கான
புதுத் துணி –
அலமாரியில் வேதனையின் கனமாய்
கனத்துக் கொண்டிருக்க –
அருகாமை நண்பர்கள் தந்த
இனிப்புக் கூட –
எப்படிக் கசக்கிறதோ தெரியவில்லை!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 41

முத்தங்கள்
கொடுக்கப் படுகின்றன;

தொடாமலேயே –
இனிக்கிறதென்பதில் – தான்
நீயிருக்கிறாய்!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 40

ல் முள் மீது
நடந்திருந்தாலும்
இத்தனை வலித்திருக்காது;

உன் அழுத விழிகளின் மேல்
கண்ணீராய் நடந்ததில்
விதியென வலிக்கிறதடி
வாழ்க்கை!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 39

ம்மைப் போன்ற
காதலர்களிடம் –
வாள் வேல் கத்திகள்
ஒன்றுமே செய்வதில்லை;

மெளனம் ஒன்றே
வெட்டி வீழ்த்திவிடுகிறது

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக