பிரிவுக்குப் பின் – 38

னக்கு முத்தம் கொடுக்க
உனக்குப் பிடிக்குமா?

எனக்கு மிகப் பிடிக்கும்
நான் கொடுத்துக் கொண்டு தானிருக்கிறேன்
என்னிடம் பேசிவிட்டுச் சென்றதும்
உன் இதயத்தை சற்று தொட்டு
இதழ்களில் பதிந்த ஈரம் பார்
அதில் –
நானுமிருப்பேன்!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 37

னக்கும் எனக்குமொரு
ஒப்பந்தம்.

இன்றிரவு எட்டு மணிக்கு
நீயும் வெளியே –
வந்து நில்;
நானும் –
நிற்கிறேன்;

நம் முகம்
தெரியாவிட்டாலென்ன,

நிலவிற்காவது
நம்முகம் –
ஒருசேர தெரியட்டுமே!!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 36

சாமிக்குத் தந்த
அர்ச்சனையில் –
தவறுதலாய்..
உன் பெயரை –
எழுதிவிட்டேன்;

பரவாயில்லை-
உனக்கும்
எனக்குமாய்
நடுவில் நிற்பது –
அந்த –
சாமி மட்டும் தானே!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 35

நீயும்
நானும்
சேர்ந்திருந்த நாட்களில்-

உன்னை தான் எனக்கு
சரியாகப்
புரியவில்லை என்பேன்;

உன்னைவிட்டு
வந்த பிறகு-
என்னையே கூட
எனக்கே –
புரிய மறுக்கிறது!!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 34

நான்
குளிக்கும் போது
ஊற்றிய நீரில்
உப்புக் கரித்ததே
மிச்சம்;

வாளி நீரில்

கண்ணீரே –
கலங்கலாக!

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக