பிரிவுக்குப் பின் – 13

வாழ்வின்
அத்தனைத்
துயரத்திற்கு
மத்தியிலும்;
எப்படி இனிக்கிறதோ
உன் முத்தம்!
———————-

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு விதவையின் நெற்றி சுடும் – பொட்டு (19)

பொட்டு

ரு விதவையின் –
நெற்றி சுடும் பொட்டு;

பெண்ணின் அடையாளத்தை
சிவந்து காட்டும் பொட்டு;

வெற்றியின் உச்சத்தை
பறையறிவிக்கும் –
ஒற்றை திலகம் பொட்டு;

குடும்ப பெண்களின் அழகிற்கு
இன்னொரு –
ஆபரணம் துறந்த அழகு பொட்டு;

நெற்றிக் குளிர்ச்சியில் –
புத்தி திருத்தும் –
செஞ் சூரணம் பொட்டு;

ஸ்டிக்கரில் ஒளிந்து
மடிந்து போன –
கலாச்சார சீர்குலைவு பொட்டு;

பத்தோ இருபதோ காசுக்கு
பிழைப்பு நடத்தும் ஏழைகளின்
ஒற்றை வியாபாரம் பொட்டு;

உலக வளர்சிக்கிடையே
நீட்டியும்
சுருக்கியும்
குறுக்கியும்
வண்ண வண்ணமாய் ஒளிர்ந்துக் கொண்டாலும்

பழைய சாந்து பொட்டின் வாசனையால் –
நாசிகளை நனைத்துக் கொண்டே மறைகிறது – பொட்டு!
————————————————————————-
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 4 பின்னூட்டங்கள்

என் உடன் பிறந்தானுக்கு திருமண வாழ்த்து!

மணமகன் : கோ.விஸ்வநாதன் மணமகள் : கு.புனிதா

நாள்: 04.02.2010

திருமண வாழ்த்து!

பூப்போல பூப்போல மனசிருக்கு
உனக்கு வாழ்வெல்லாம் இனிப்பான வளமிருக்கு;
தருசான நிலம் போல நீயிருக்க – உன்னை
உழுது எடுத்து உலகமளக்க வாழ்விருக்கு!

கடுகு மணி ரகசியம் தான் கத்திருக்க
முயற்சிக்கு மறு அர்த்தம் தெரிஞ்சிருக்க;
ஊருலகம் சேர்ந்து இப்போ வாழ்த்துதடா
உனக்கு மாலையிட்ட மங்கையையும் போற்றுதடா!

ஒரு சொட்டு கண்ணீரில் –
வாழ்த்து கணக்குதடா ,
நீ வாழ போற சிறப்பை சொல்ல –
வார்த்தை கிடைக்கலடா!

வாழ்ந்தோரின் வாழ்த்துக்களால்
மனசு பொங்குதடா;
நீ வாழ்வாங்கு வாழ பொண்ணு
கிடைத்துதடா!

நாளும் பொழுதும் வாழும் உயிரும்
ஒண்ணொன்னும் வாழ்வின் அனுபவம் தான்
அதில் நல்லதெல்லாம் கத்துகிட்டு –
உயர்ந்துக்கடா!

ஊரை விட்டு வந்தாலே பொண்ணு
யோசிக்குது;
இது கடல் தாண்டி புகுந்த உயிரு
போற்றி மெச்சிக்கடா!

பேரும் புகழும்; பார்ப்பவர் மகிழ்வும்;
சிந்தனை புதிதும்; சிங்கார சிரிப்பும்;
செல்வங்கள் பதினாறும் –
சொந்தமெல்லாம் கூடி வாழ்த்த பெற்றுக்கடா

தமிழ் போல சுற்றும் கதிர் போல
வட்ட நிலவின் மிதம் போல –
நீடூழி –
ஈருடல் ஒருயிருமாய் இருவரும் வாழுங்கடா.. வாழுங்கடா!
————————————————————-

அம்மாவும் நாங்களும்…

Posted in வாழ்த்துக்கள்! | 6 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 120

தூரம் –
நிறைய பேசுகிறது;
அருகாமை
மறைந்ததிலிருந்து!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 119

னதிலிருந்து
கொட்டிய –
ஒன்றிரண்டு வார்த்தைகள் தான்
புறப்பட்டு விடுகிறது
காலத்திற்குமான தீர்பெழுத!

Posted in உடைந்த கடவுள் | 4 பின்னூட்டங்கள்