பிரிவுக்குப் பின் – 18

கவலை படாதே..
இந்த முறை
நான் ஊருக்கு வந்தால்
அங்கேயே தங்கி விடுகிறேன்;

ஏன் சிரிப்பு???

இப்படி சொல்லி சொல்லித் தான்
பத்து வருடங்களை –
இங்கேயே கழித்து விட்டேனோ;

பரவாயில்லை – வருத்தப் படாதே
நாம் தொலைத்த ஆசைகளின்
வருமானத்தில் –
நம் பிள்ளைகளின் வாழ்கையையாவது
நம்மூரிலேயே வாங்கித் தருவோம்!
———————————————————–

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 17

இன்று எனக்குப்
பிறந்தநாள்

புது துணியுடுத்தி
எல்லோருக்கும் இனிப்புக் கொடுத்து
தொலைபேசியில் எல்லோரிடமும்
வாழ்த்துப் பெற்றுக் கொண்டு
வீட்டிற்கு வந்து கண்ணாடி பார்கையில்

கண்களின் ஓரம் –
ஒரு சொட்டுக் கண்ணீர் சுட்டது;

தூக்கம் கலைவதற்குள் நீ வந்து
என் காதுகளில் கிசுகிசுக்காத
பிறந்த நாள் ஒரு பிறந்த நாளா!
———————————————————

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 16

தொலைபேசியில்
பேசும்போது –
ஏதோ நீ பேச வந்ததை
பாதியில் நிறுத்தினாய்;
நாம் கடந்த இரவுகளின்
மிச்ச ஆசைகள் என்று நினைக்கிறேன்;
தயவுசெய்து –
கடிதத்தில் கூட அவைகளை
எழுதிவிடாதே,
இன்னும் –
ஒன்றரை வருடத்திற்கு மேல் சுமக்க
எனக்கு பலமில்லை!
——————————————————–

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 15

நாட்கள்
பல கடந்த பின்பும்
நான் மட்டும் –
அங்கேயே நிற்கிறேன்;

உன்னை-
விட்டுப் பிரிந்த
அந்த –
கடைசி நொடிகளில்!!
———————-

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 14

நெடுந்தூர
பயணத்திற்குப்
பின்னும் –

உன்னைவிட்டு நான்
பிரியவேயில்லை;
சிரிக்கிறார்கள் சிலர்
நான் –
சொல்வதை கேட்டு!
————————-

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக