ஹைக்கூ – 103

ரும்புப் பாத்திரத்தில்
தாளித்த குழம்பில்
மன்சட்டியின் வாசனை
கருகிக் காணாமல் –
போய்விட்டது!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 102

கேஸ் ஸ்டவ்விலும்
குக்கரிலும் வேகும்
சோற்றுப் பருக்கைகள்
மறந்துத் தான் போயின
பானையில் வெந்ததை!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 101

பானை –
நிறைய வீடுகளில்
உடைவதேயில்லை
காலத்திற்கும்!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 100

காம விளக்கேற்றி
தெருவில் வைத்தேன்
இருண்டது வாழ்க்கை
வேசி!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

அது வேலையை அது செய்தது; நீ என்ன செய்தாய்!

தெருவோரம்
நடந்து சென்றேன்
இன்று குடியரசு தினம் வாவென
கொடி குத்திவிட அழைத்தார்கள்.

ஐயோ தேசிய கொடியாயிற்றே
சற்று பொறுயென்று சொல்லிவிட்டு
ஓடி –
குளித்து சுத்த ஆடை அணிந்துவந்து
தேசிய கொடியை –
மார்பின் மேல் குத்திக் கொண்டு
வீட்டிற்கு வந்தேன்;

என் ஒற்றை வயது குழந்தை
ஓடிவந்து –
கொடியை தொட்டு தொட்டுப் பார்த்தது
படாரென பிடுங்கி வாயில் வைத்து கடித்து
இரண்டாய் மூன்றாய் நான்காய் கிழித்து
கீழே வீசிவிட்டு –
ஹே… என்று சிரித்தது;

நான் கோபத்தில்
ஐயோ தேசிய கொடியாயிற்றே என
ஓங்கி ஒரு அரை விடப் போனேன்

கிழிந்திருந்த கொடித் துண்டுகள் கேட்டது-

‘நீ வெறும் கொடி குத்திக்கொண்டு
அலைய நினைத்தாய் –
அது கிழித்தாவது போட்டது!’
——————————————
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | 4 பின்னூட்டங்கள்