சோறு கிடைத்தவனுக்கு கொடி பறக்கும் நாள்! (குடியரசு நாள்)

தெருவுக்கு தெரு டாஸ்மாக்
வீட்டுக்கு வீடு தொலைகாட்சி
மனிதனுக்கு மனிதன் அரசியல் கட்சி
மண்ணாங்கட்டி பொழப்புக்கு வாய்க்கு நூறு இங்கிலீசு
மரத்திற்கு மரம் சிரித்துக் கொண்டன; யாருக்குமே வெட்கமில்லை!

படிப்பு முடியும் முன்னரே பாரின்
படித்து முடித்தாலும் வெட்டி சோறு
பாதி நாள் வேலைக்கு போனால் –
மீதி நாள் பிகரு வெட்டும் சோம்பேறி
சுயநலப் பட்டாளத்திற்கு துளி கூட வெட்கமில்லை!

காமம் தெறிக்கும் பார்வை
காசு பிடுங்கும் அவசரம்
மாடி வீட்டு மீதேறி நின்று –
கீழிருப்பவன் மேல் எச்சில் உமிழத் துடிக்கும்
வெறி பிடித்துத் திரிபவர்களுக்கு –
ஒரு துளியும் வெட்கமில்லை!

முளைச்சி மூனெல விட்டா சினிமா
மூச்சு விடவும் கால் கழுவவும் ஜோசியம்
நாள்காட்டி பேர் சொல்லி –
நேரங்களை தொலைக்கும் மூட தனம்
வீட்டுக்கும் சோத்துக்கும் வாஸ்த்து பார்க்குற ஒருத்தனுக்கும்
வெட்கமில்லை வெட்கமில்லை வெட்கமேயில்லை!

வாய் கூசாம கேட்கும் லஞ்சம்
ஏமாந்தவன் வண்டி மடக்கும் அசிங்கம்
போலீசுக்குப் பக்கத்துலையே நடக்கும் கொலை
அரசியல் வாதின்னா கொம்பு முளைத்த திமிரு
அரசு வேலை கிடைத்துவிட்டால் –
வங்கியிலும் தபால் நிலையத்திலும் கூட
அரியணையில் அமர்ந்து கொண்டதான மூர்க்கதனம்
கர்ப்பகிரஹத்தில் கற்பழித்த பூசாரிகளை தாண்டியும்

என் தேச கொடி கனகம்பீரமாய்
பட்டொளி வீசி பறக்க உழைத்த
அத்தனை பேருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!
——————————————————
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | 15 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 99

னிதன் –
நினைத்துக் கொண்டான்
அவன் தலைக்குச் சூடிய
பூவும்,
பூஜைக்கு வைத்த மலர்களும்
பேருகொண்டதாய்;

பூக்கள் –
நினைத்துக் கொண்டன
மனிதன் பறித்த பூவும்
கிள்ளி –
மாலையில் தொடுத்த மலர்களும்
இறந்துப் போனதாய்!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 98

பூக்கள் ஆயிரம்
பூக்கின்றன;
ஒருசில பூக்களே
நுகரப் படுகின்றன!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 97

னிதனை மனிதன்
வெட்டினால் –
தெருவில் போகும்
நாய் கூட குறைக்கிறது;

எதிர் வீட்டிலிருப்பவன் –
மரங்களை வெட்டினான்.

ஒன்றை கூட என்னால்
தடுக்க முடியவில்லை!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 96

ரமும் –
செடியுமென் ஜாதியென
நினைக்கும் நான் –
தெருவில் ஆங்காங்கே
பட்டுப் போகும் –
மரத்திற்கான சோகத்தை
ஏனென்று கேட்பதேயில்லை!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக